11 இசையமைப்பாளர்கள், 15 பாடல்கள், 3 ஒளிப்பதிவாளர்கள், 4 கதைகள் என்று அனைத்துமே ஒன்றுக்கு மேற்பட்டவையாக இருந்தாலும், படத்தின் தலைப்பை ‘சோலோ’ என்று வைத்து எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள துல்கர் சல்மான் படத்தின் ஹீரோயின்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி மேலும் எதிர்ப்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
பிஜாய் நம்பியார் இயக்கும் இப்படத்தில் நான்கு கதைகள் உள்ளது போல, நேஹா சர்மா, சாய் தன்ஷிகா, சுருதி ஹரிஹரன், ஆர்த்தி வெங்கடேஷ் என நான்கு ஹீரோயின்கள் துல்கருக்கு ஜோடியாக நடிக்கின்ற்னர்.
தற்போது, துல்கருடன் நான்கு ஹீரோயின்கள் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளியாகி படத்தின் மீது ஆர்வத்தையும், எதிர்ப்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...