Latest News :

”’தில் ராஜா’ எனக்கான அடையாளத்தை பெற்று தரும்” - நடிகர் விஜய் சத்யா நம்பிக்கை
Saturday July-20 2024

காதல், ஆக்‌ஷன், கமர்ஷியல் உள்ளிட்ட அனைத்து ஜானர்களுக்கும் ஏற்ற ஹீரோக்களாக மட்டும் இன்றி நடிப்பிலும் அசத்துபவர்களாக இருந்தாலும், தங்களுக்கான சரியான இடம் கிடைக்காமல் போராடும் நடிகர்கள் பலர் உண்டு. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிப்பதற்காக போராடி வரும் திறமையுள்ள இளம் நடிகர் விஜய் சத்யா.

 

பார்த்த உடனே பிடித்துப் போகும் அளவுக்கு இருக்கும் விஜய் சத்யா, தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக கடந்த சில வருடங்களாக கதை தேர்வில் கவனம் செலுத்தி வந்தார். தனது திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான கதை மற்றும் இயக்குநருக்காக காத்திருந்த நிலையில், அவருடைய காத்திருப்புக்கு மிகப்பெரிய பலன் கிடைத்திருக்கிறது. ஆம், சரத்குமார், அர்ஜுன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு பல வெற்றிப் படங்களை கொடுத்த பிரபல கமர்ஷியல் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் கண்ணில் பட்ட விஜய் சத்யா, தற்போது அவர் இயக்கும் ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் அதிரடி நாயகனாக நடித்திருக்கிறார்.

 

‘தில் ராஜா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விஜய் சத்யாவுக்கு ஜோடியாக ஷெரின் நடித்திருக்கிறார். காமெடி வேடத்தில் ‘கே.பி.ஒய்’ பாலா நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

அனைத்து பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயராக உள்ள இப்படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ள நிலையில், பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகமாக டிரைலர் மற்றும் பாடல்களை திரையிட்டு காட்டிய நாயகன் விஜய் சத்யா, ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பெற்று தரும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

 

Dhil Raja

 

தொடர்ந்து படம் குறித்து பேசிய நடிகர் விஜய் சத்யா, “நடுத்தர குடும்ப தலைவனாக இந்த படத்தில் நடித்திருக்கிறேன். எதிர்பாராமல் நடக்கும் ஒரு மோதல், எதிர் முனையில் இருப்பவர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருந்தால் என்னவாகும்,  அதன் மூலம் நாயகனுக்கும், அவனது குடும்பத்திற்கும் ஏற்படும் பாதிப்பு, அதில் இருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள், என்பதை முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்‌ஷன் படமாக மட்டும் இன்றி சஸ்பென்ஸ் திரில்லர் பாணியிலும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் சொல்லியிருக்கிறார்.

 

நல்ல கதைக்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று தோன்றியது, அதனால் தான் நான் சிறிது காலம் இடைவெளி எடுத்துக் கொண்டேன். தற்போது அதற்கான பலன் தான் ஏ.வெங்கடேஷ் சார் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் இயக்குநர் என்ன சொன்னாரோ அதை தான் நான் செய்திருக்கிறேன். அவர் பல வெற்றிகளை பார்த்தவர், நான் வெற்றிக்காக காத்துக்கொண்டிருப்பவன், அதனால் வெங்கடேஷ் சாரிடம் நான் சரணடைந்து விட்டேன். அவர் சொல்வதை எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் செய்திருக்கிறேன். 

 

ஷெரின் நாயகியாக நடித்திருப்பது படத்திற்கு பலம் தான். அவர் ஏற்கனவே பெரிய பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர், சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்திருக்கிறார், அதனால் அவர் படத்தில் இருப்பது பிளஸ் தான். ஷெரினுடன் நடித்த நடிகர்கள் பெரிய நடிகர்களாக உயர்ந்திருப்பதால் அவரை நாயகியாக போட வேண்டும் என்று நான் கேட்கவில்லை, இயக்குநர் தான் தேர்வு செய்தார். ஆனால், ஷெரினின் செண்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆனால் எனக்கு சந்தோஷம் தான். ‘கே.பி.ஒய்’ பாலா காமெடியில் கலக்கியிருக்கிறார். அவரது டைமிங் சரியாக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. நிச்சயம் ரசிகர்களுக்கு பாலாவின் காமெடி காட்சிகள் பிடிக்கும். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சார் வில்லனாக அரசியல்வாதி வேடத்தில் நடித்திருக்கிறார். அம்ரீஷ் இசையில் பாடல்கள் சிறப்பாக வந்திருப்பதோடு, அதை படமாக்கிய விதத்தையும் பலர் பாராட்டி வருகிறார்கள், நிச்சயம் ஒளிப்பதிவாளருக்கும் நல்ல எதிர்காலம் உண்டு. 

 

இயக்குநர் ஏ.வெங்கடேஷ் சாரின் படங்கள் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஒரு ஹீரோவின் முழு திறமையை வெளிப்படுத்தும் அனைத்து அம்சங்களும் அவர் படத்தில் இருக்கும். அப்படி தான் இந்த படத்திலும் எனது திறமையை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்திருக்கிறார். குடும்பமாக பார்க்க கூடிய கமர்ஷியல் கதையாக இருந்தாலும், அதில் ஆக்‌ஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் காட்சிகளும் பாராட்டும்படி இருக்கும். இந்த படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது, நிச்சயம் ‘தில் ராஜா’ படம் தமிழ் சினிமாவில் எனக்கான இடத்தை பெற்று தரும் என்று நம்புகிறேன்.” என்றார்.

 

Dhil Raja

 

’தில் ராஜா’ திரைப்படத்தின் வெளியீட்டு பணிகளில் தயாரிப்பு தரப்பு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், விஜய் சத்யா அடுத்ததாகவும் இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கான ஆரம்ப பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ‘தில் ராஜா’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை படக்குழு வெளியிட உள்ளது.

Related News

9902

’வீரவணக்கம்’ படத்தில் கம்யூனிச தோழராக நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday February-26 2025

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

Recent Gallery