ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் ‘கடைசி உலகப்போர்’. மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை மற்றும் கிளிம்ப்ஸே வீடியோ லண்டனில் உள்ள உலகப் புகழ்ப் எற்ற OVO Arena Wembley-ல் ஹிப் ஹாப் தமிழா இசைக் கச்சேரியில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. OVO Arena Wembley இல், ஒரு தமிழ்ப் படத்தின் முதல் பார்வை மற்றும் கிளிம்ப்ஸே வெளியாவது இதுவே முதல் முறை.
ராப் பாடகராக அறிமுகாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
மீசைய முறுக்கு, சிவக்குமாரின் சபதம் படங்களுக்கு பிறகு மூன்றாவது படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார்ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் முகத்துக்குப் பின் பீரங்கி, விமானம், சிதிலமடைந்த போர்க்களம் என படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் போரின் பின்னணியில், மக்களின் துயரங்களைப் பற்றிப் பேசும் படைப்பாக இப்படம் இருக்குமெனத் தெரிகிறது. மிக வித்தியாசமான முதல் பார்வை இணையம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நாசர், நட்டி, அனகா, என். அழகன் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், சிவா ஷரா, எப்.ஜே, குஹன் பிரகாஷ், ராக்கெட் ராஜேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...