வசீகரிக்கும் அழகு, நடனம், நடிப்பு என சமூக வலைதளங்களில் பிரபலமாக வலம் வரும் ஸ்ரீநிஹா, தற்போது தமிழ் சினிமா நடிகையாகவும் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார். மறைந்த டாக்டர்.சேது நாயகனாக நடித்த ‘50-50’ படத்தில் கதாநாயகியின் தங்கை வேடத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் சமுத்திரக்கனியின் ‘ஆண் தேவதை’, மிஷ்கினின் ‘சைக்கோ’, ’மயோன்’, சந்தானம் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘இங்கே நாங்க தான் கிங்கு’ உள்ளிட்ட பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது ‘8 தோட்டாக்கள்’ புகழ் வெற்றி மற்றும் சத்யராஜ் முதன்மை வேடத்தில் நடித்து வரும் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடித்து வரும் ஸ்ரீநிஹா, மேலும் சில படங்களிலும் நல்ல நல்ல வேடங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளம் மற்றும் வெள்ளித்திரை என்று பிஸியாக இருக்கும் நடிகை ஸ்ரீநிஹாவுக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான அத்தனை அம்சங்களும் இருந்தாலும், நல்ல வேடமாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்க ரெடியாக இருப்பவர், தன்னுடைய திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்துக்கொண்டது இதோ,
நடனம் கற்றுக்கொண்ட போது மாடலிங் துறையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பல விளம்பர படங்களில் நடித்தேன். ஜேடி ஜெர்ரி உள்ளிட்ட பல இயக்குநர்களின் பல விளம்பர படங்களில் நடித்ததோடு, பல குறும்படங்களிலும் நடித்து வந்தேன். அதனை தொடர்ந்து தான் திரைப்படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. நாயகியாக மட்டும் இன்றி, நல்ல வேடமாக இருந்தால் எந்த வேடத்திலும் நடிக்கலாம், என்று முடிவு செய்தேன். அதன்படி ‘50-50’ படத்தில் நாயகியின் தங்கையாக நடித்தேன். பிறகு மிஷ்கின் சாரின் சைக்கோ படத்தில் நடித்தேன். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், ஒரே மாதிரியான வேடமும், கவர்ச்சியான வேடமும் தொடர்ந்து வந்ததால் அப்படிப்பட்ட வாய்ப்புகளை நிராகரித்து விட்டேன். கதை மற்றும் கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிக்கலாம், ஆனால் கவர்ச்சியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘இங்கே நாங்க தான் கிங்கு’ படத்தில் காமெடியாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் கவர்ச்சியாகவும் வருவேன். ஒரு கமர்ஷியல் படத்திற்கு எந்த அளவுக்கு கவர்ச்சி தேவைப்படுமோ அப்படி தான் அந்த வேடத்தை வடிவமைத்தார்கள். அதுபோல் வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். சந்தானம் சாருடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. என்னுடைய நடிப்பை மட்டும் அல்ல என்னையும் ’கோலிவுட் பிரியங்கா சோப்ரா’ என்று சந்தானம் சார் பாராட்டினார். அந்த படத்தின் வெற்றியால் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் நல்ல வாய்ப்புகள் வராதது வருத்தமளிக்கிறது. தமிழ் சினிமாவில் கதாநாயகிகளுக்கு மட்டும் இன்றி மற்ற வேடங்களுக்கு கூட தமிழ் பெண்களை நடிக்க வைக்க யோசிக்கிறார்கள், அது ஏன் என்பது தெரியவில்லை. வில்லி உள்ளிட்ட வேடங்களில் நடித்து என் நடிப்பு திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன். அதற்காக தான் ஒரே மாதிரியான வேடங்களை தவிர்த்து வருகிறேன். வெற்றி படத்தில் எனக்கு நல்ல வேடம் அமைந்திருக்கிறது. அந்த படத்தை போல வேறு சில படங்களில் நல்ல நல்ல வேடங்களில் நடித்து வருகிறேன்.
சமூக வலைதளங்களில் எனக்கு நிறைய ரசிகர்கள் இருப்பது பற்றி தான் எல்லோரும் கேட்கிறார்கள். முன்னணி கதாநாயகிகள் கூட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார்கள், அதுபோல் நானும் எனது திறமையைகளை வெளிக்காட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன், அதன் மூலம் எனக்கு பாராட்டுகளும், வாய்ப்புகளும் கூட கிடைக்கிறது. குறிப்பாக சரிதா மேடம் நடித்த படத்தின் ஒரு காட்சியை நடித்து நான் யூடியுபில் அப்லோட் செய்தேன். அந்த வீடியோவை சேரன் சார் பார்த்து பாராட்டியதோடு, சரிதா மேடமும் பார்த்து அவரிடம் இந்த பெண் நன்றாக நடிப்பதாக பாராட்டியுள்ளார். இதுபோன்ற பாராட்டுகளை திரைப்படங்களிலும் பெற வேண்டும் என்பது தான் என் ஆசை.
தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை நிச்சயம் பிடிப்பேன், என்ற தன்னம்பிக்கையோடு உற்சாகமாக பயணிக்கும் நடிகை ஸ்ரீநிஹா, மலையாள சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...
அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ...
மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா...