Latest News :

’அந்தகன்’ படத்திற்காக பூனையை தத்தெடுத்த நடிகர் பிரஷாந்த்!
Thursday August-08 2024

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (ஆக.9) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பர பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவதால் மக்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ‘அந்தகன்’ படத்தில் பூனை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அதற்காக குட்டி பூனை ஒன்றை தத்தெடுத்து தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்த பிரஷாந்த், படத்தில் அந்த பூனையுடன் நடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் கைதட்டல், பெறும் என்று படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் பாராட்டியுள்ளார்.

 

இது குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை கூறிய பட்டுக்கோட்டை பிரபாகர், “நாளை முதல் இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட ’அந்தாதுன்’ படத்தின் புதிய தமிழ் வடிவம் ’அந்தகன்’, அந்தப் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.

 

நாணயமிக்க தயாரிப்பாளரும்,(இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே என் ஊதியத் தொகையைக் கொடுத்தாராக்கும்) நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குநருமான தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன். 

 

இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார். பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரது மனதின் மென்மை பஞ்சை விட இலகுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி இருப்பதால் தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கி இருக்கிறார்.

 

Pattukottai Prabhakar

 

நாயகன் பிரஷாந்தும் படு பிரண்ட்லி, ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதவர் என்பதே அவரின் பலம். அதிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது, அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை தத்தெடுத்து வீட்டிலே வைத்து வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் பிரஷாந்த் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பியானோ வாசிக்கும்  காட்சிகள் எல்லாம் வேற லெவல். மொத்ததில் இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குநர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் வெற்றி வலம் வருவார். எனவே வெற்றிக்கு வாழ்த்துங்கள், திரையரங்கில் படம் பார்த்து ஆதரியுங்கள்.” என்றார்.

 

ஸ்டார் மூவிஸ் சார்பில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்க, சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Related News

9939

’வீரவணக்கம்’ படத்தில் கம்யூனிச தோழராக நடிக்கும் சமுத்திரக்கனி!
Wednesday February-26 2025

பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும்  தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

Recent Gallery