Latest News :

”இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது” - நடிகர் பிரஷாந்த்
Friday August-09 2024

ஆல் செண்டரிலும் ரசிகர்கள் கொண்ட ஒரே நடிகர் என்றால் அது டாப் ஸ்டார் பிரஷாந்த் தான். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களின் படங்களில் இளம் வயதிலேயே நடித்த நாயகனும் இவரே தான். ஒரு நாயகனுக்கான அத்தனை தகுதிகளையும் இளம் வயதிலேயே வளர்த்துக் கொண்டு காதல், ஆக்‌ஷன், செண்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து ஜானர்களிலும் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் பிரஷாந்த் நடிப்பில், இன்று (ஆக.9) வெளியாகியிருக்கும் ‘அந்தகன்’ ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

‘அந்தகன்’ படத்தை தொடர்ந்து விஜயின் ‘கோட்’ உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரஷாந்த், மீண்டும் தனது நம்பர் ஒன் இடத்தை நிச்சயம் பிடிப்பார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. காரணம், தற்போது இயக்குநர்கள் பலர் பிரஷாந்துக்கு கதை சொல்லி வருவதோடு, அவரை வைத்து படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனால், பிரஷாந்த் ஏரியாவில், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில், மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் ‘அந்தகன்’ படம் பற்றி நடிகர் பிரஷாந்த் கூறுகையில், “’அந்தகன்’ படத்தில்  ஒவ்வொரு சீனிலும் சஸ்பென்ஸ் இருக்கும். பிளாக் காமெடி இருக்கும். அதனால் சிரித்துக் கொண்டே  இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும். குறிப்பா என்னுடைய திறமையை வெளிப்படுத்தற மாதிரி பல படங்கள்ல நடிச்சிருந்தாலும். பியானோ இசைக் கலைஞனா நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால், என்   திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன். அது மட்டுமில்லாமல், தமிழுக்கு  மையக் கதையைக் கெடுத்திடாத வகையில், அப்பா சின்னசின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார். தமிழுக்கு சரியாக  இருக்காதுன்னு நினைச்ச சில காட்சிகளை மாத்தியிருக்கிரார். கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாவும் கதையை வேகமாக நகர்த்தும் பாணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு. குறிப்பாக சொல்வதானால் எனக்கும் சமுத்திரக்கனி அண்ணாவுக்கும் ஒரு பைட்  எடுத்தார்கள். இதற்காக ஐந்து நாள் ஷூட்  நடத்தினோம். அது மிக மிரட்டலான காட்சியாக  அமைந்துள்ளது. இதற்காக மாடியில் இருந்து  நிஜமாகவே குதித்ததெல்லாம் தனிக் கதை . இந்த சணடைக் காட்சி தமிழுக்காக சேர்த்த விஷயம்.

 

மேலும் வெயிட்டான கதை என்பதாலேயே  கார்த்திக் அண்ணா, சிம்ரன், சமுத்திரக்கனி அண்ணா. ஊர்வசி , லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார், யோகிபாபுன்னு நிறைய பேர் கமிட் ஆகி உள்ளார்கள். ஒவ்வொருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவம். பிஸியாக இந்திப் படங்கள் பண்ணி கொண்டிருக்கும் ரவி யாதவைக் கூட்டிட்டு வந்து ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார் அப்பா   . பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் ஒவ்வொன்றும் கவனிக்க வைக்கும் .கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்பட எல்ல டெக்னீஷியந்களும்  தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

 

முன்னொரு காலத்தில் இளசுகளுந் அதரச ஹீரோவாக இருந்த   கார்த்திக் சாருக்கு தனி  முக்கியத்துவம் இருக்கிறது  இந்தப் படத்தில் 1980-ம் வருட கார்த்திக்கை அவர் வரும்  ஒவ்வொரு சீனிலும்  பார்க்கலாம். அவர் கேரக்டர் எல்லாருக்கும்  பிடிக்கும் படி  இருக்கும். கதையை கேட்டு , பார்த்து  இனவால்வ ஆகி  தன் பாணியில நடித்து  அசத்தி இருக்கிறார்.

 

அப்புறம் தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும் நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்சன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள சிம்ரனும் நானும்  சேர்ந்து ஆறு படங்கள்ல ஜோடியா நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளோம். அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த  கேரக்டரில் சிம்ரன் வருகிறார். கிடைச்ச எல்லா ரோலையும்  அவர் தன் பெர்ஃபார்மன்ஸால்  மிரட்டுவது வாடிக்கை  .அந்த ஸ்டைலில்  அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். நிச்சயமா அவர் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்றே நம்புகிறேன் .வனிதா விஜய்குமார் கேரக்டரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கைத் தட்டி ரசிக்கப் போவது நிஜம்.. அது போல நிக தமிழ் பெண் ஆன பிரியா ஆனந்துக்கு இனி கால்ஷீட் கொடுப்பதில் பிசியாகி விடுவார்.. அந்த அளவுக்கு எல்லாருக்கும் சமமாக, சவாலான வாய்ப்பு வழங்கி இருக்கிறார் இயக்குநரும் அப்பாவுமான தியாகராஜன் சார்.           

 

இனி வெள்ளித்திரையில்  எனக்கு  இடைவெளி இருக்காது. இது வரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத் தயார்படுத்திக்கொள்ள  அந்த கால அவகாசம்  தேவையாக இருந்தது. இனி அது இருக்காது.  தொடர்ந்து நடிக்கப் போகிறேன். இப்ப தினமும் நிறைய இயக்குநர்கள் வந்து  கதை சொல்வதும்,  தயாரிப்பாளர்கள் வந்து போவதும்  அதிகரித்து விட்டது. இந்த அந்தகன்-னுக்கு அடுத்ததாக விஜயுடன் நடித்த கோட் ரிலீஸ் ஆகப் போகிறது. நெக்ஸ்ட்  அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடிக்கும் ‘ஒரு  படம் பண்ணுகிறோம். அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில் உருவாகிறது. இது தவிர விஜய் ஆண்டனி நடித்த  ‘நான்’ படத்தை இந்தியில்  ‘ரீசார்ஜ்’ என்னும் டைட்டிலில்  ரீமேக் பண்ணுகிறோம். அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்.” என்று உற்சாகமாக கூறினார்.

Related News

9940

’சார்’ திரைப்படம் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான படம் - இயக்குநர் வெற்றிமாறன்
Thursday September-19 2024

நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சார்’...

மீனா, ஷாலினி வரிசையில் லக்‌ஷனா ரிஷி மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் - இயக்குநர்கள் கே.பாக்யராஜ், பேரரசு பாராட்டு
Thursday September-19 2024

அப்பா மீடியா சார்பில் அனிஷா சதீஷ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் வீடியோ தனியிசை பாடல் ‘எங்க அப்பா’...

”கலைக்கு என்றும் உண்மையாக இருப்பேன்” - ‘வாழை’ 25 வது நாள் வெற்றி விழாவில் மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி
Wednesday September-18 2024

நவ்வி ஸ்டுடியோஸ் (Navvi Studios) நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஃபார்மர்ஸ் மாஸ்டர் பிளான் புரொடக்‌ஷன்ஸ் வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட, ’வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று, 25 நாளைக் கடந்திருக்கிறது...

Recent Gallery