தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவை கடந்து ஹாலிவுட்டிலும் தனது வெற்றியை பதிவு செய்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர், கதையாசிரியர் என சினிமாத்துறையின் சகல வித்தைகளிலும் கைதேர்ந்தவர்.
தற்போது, தனுஷ் தனது 50 வது திரைப்படமான ‘ராயன்’ மூலம் மீண்டும் இயக்குநராக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான ‘ராயன்’ திரைப்படம் மக்களிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவு மற்றும் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக நடிகர் தனுஷ் ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார்.
பிரபல நடிகர்கள் சமுத்திரக்கனி பரத் முதல் முறையாக இணையும் தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சகோதரத்துவத்தையும் இதய உறவுகளையும் உறுதிப்படுத்தும் ஒரு அபூர்வ திரைப்படம் 'வீர வணக்கம்'...
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...