‘கே.ஜி.எப்’, ‘சலார்’ படங்களை தொடர்ந்து இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது அடுத்த படத்திற்காக நடிகர் என்.டி.ஆர் உடன் கைகோர்த்துள்ளார். இவர்களுடைய கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘என்.டி.ஆர் நீல்’ என்று அழைக்கப்படுகிறது.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த கூட்டணியின் புதிய படம் ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இதில் நடிகர் என்.டி.ஆர் மற்றும் இயக்குநர் பிரஷாந்த் நீல் தங்களது குடும்பத்தினருடன் கலந்துக்கொண்டார்கள்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் சார்பில் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கொசராஜு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழாவின் போதே படத்தின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சங்கராந்தியை முன்னிட்டு தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் 2026 ஆம் ஆண்டு, ஜனவரி 9 ஆம் தேதி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி கவனிக்கிறார்.
ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...