Latest News :

’மட்கா’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியானது!
Monday August-12 2024

இயக்குநர் கருணா குமார் இயக்கத்தில், வைரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்.ஆர்.டி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் டாக்டர்.விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிப்பில், வருண் தேஜ் நடிப்பில் உருவாகும் பான் இந்தியா திரைப்படம் ‘மட்கா’.

 

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் பிரமாண்டமான முறையில் நடைபெற்று வரும் நிலையில், படக்குழு படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில், வருண் தேஜ்  இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு சாயல்களைக் காட்டுகிறது.

 

போஸ்டரிலல் வருண் தேஜ் இளமையாகவும், துணிச்சலாகவும், சுருட்டு புகைப்பதை காணலாம். அவரது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல், வின்டேஜ் ஸ்டைலில் அமைந்துள்ளது. மற்றொரு தோற்றத்தில் அவர், அதே போல் சுருட்டு புகைக்கிறார் ஆனால்  அவர் இங்கே பணக்காரராகவும், வயதானவராகவும், கண்ணாடி மற்றும் நரைத்த முடியுடன் இருக்கிறார். அவரது மேஜையில் துப்பாக்கி இருக்கிறது. விளையாடும் அட்டைகளில் இருந்து, கிங் அட்டை பின்னணியாக பயன்படுத்தப்படுகிறது. மிகவும் ஈர்க்கக்கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் பெரும் ஆவலைத் தூண்டுகிறது.

 

Matka First Look

 

முந்தைய காலப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏ கிஷோர் குமார் ஒளிப்பதிவு , ஜிவி பிரகாஷ் குமார்  இசையமைக்கிறார் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ்  எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

 

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Related News

9947

’பரோஸ்’ ஒரு மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் - நடிகர் மோகன்லால் உறுதி
Tuesday December-24 2024

ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

Recent Gallery