Latest News :

’வேதா’ படத்தின் “நீதானே நீதானே...” பாடல் வெளியானது!
Monday August-12 2024

ஷர்வாரி, ஜான் ஆபிரஹாம் மற்றும் அபிஷேக் பானர்ஜி நடிப்பில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜேஏ எண்டர்டெயின்மெண்ட் ஆகியவை வழங்கும் 'வேதா' படத்தில் இருந்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காதல் பாடலான, ‘நீதானே நீதானே’ வெளியாகியுள்ளது. 'ஹோலியான்' மற்றும் 'மம்மி ஜி' ஆகிய இரண்டு எனர்ஜிட்டிக் பாடல்களுக்குப் பிறகு, இந்த அழகான பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். 

 

இந்தப் பாடலில் ஜான் ஆபிரகாம் மற்றும் தமன்னா பாட்டியா இடையேயான கெமிஸ்ட்ரி நிச்சயம் பார்வையாளர்களை மயக்கும். அதேசமயம், பாடலின் முடிவில் ஒரு அதிர்ச்சி தரும் ட்விஸ்ட்டும் உள்ளது. 

 

பாடலை வெளியிட்ட ஜான் ஆபிரகாம், "'நீதானே நீதானே...' பாடல் 'வேதா' படத்தின் ஆன்மா. என் கதாபாத்திரத்தின் எமோஷனல் மற்றும் ரொமாண்டிக் பக்கத்தை இது காட்டும். இந்தப் படத்தில் வெறும் ஆக்‌ஷன் மட்டுமல்லாது காதலும் உண்டு என்பதற்காகதான் இந்தப் பாடல்" என்றார். 

 

தமன்னா பாட்டியா பகிர்ந்துகொண்டதாவது, “ஜானுடன் முதல்முறையாக பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. அவர் தனது கதாபாத்திரத்திற்குக் கொடுத்த அர்ப்பணிப்பு திரையில் சிறப்பாக வந்துள்ளது. இந்த பாடல் காதல் மற்றும் பல நல்ல நினைவுகள் நிறைந்ததாக இருக்கும். இது அனைவருக்கும் கனெக்ட் ஆகும் என நான் நம்புகிறேன்!” என்றார். 

 

இது குறித்து பாடலின் இசையமைப்பாளர் அமல் மாலிக் கூறுகையில், "இந்த காதல் மெல்லிசை 'நீதானே நீதானே...' நிச்சயம் ரசிகர்களின் இதயங்களை ஊடுருவும். இது பாடல் என்பதையும் தாண்டி, நான் அனுபவித்த காதலை இந்தப் பாடலில் முழுமையாகக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.  

 

'நீதானே நீதானே...' பாடலுக்கு அமல் மாலிக் இசையமைத்துள்ளார். குணால் வர்மா பாடல் வரிகளுக்கு அர்ஜித் சிங் பாடியுள்ளார். 

 

நிகில் அத்வானி இயக்கி இருக்க, அசீம் அரோரா எழுதிய ‘வேதா’ படத்தை ஜீ ஸ்டுடியோஸ், உமேஷ் கேஆர் பன்சால், மோனிஷா அத்வானி, மது போஜ்வானி, ஜான் ஆபிரகாம் மற்றும் மீனாக்ஷி தாஸ் இணைந்து தயாரித்துள்ளனர். 

 

ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பான ‘வேதா’ படத்தின் முன்பதிவு தொடங்கியது! ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது ஆகஸ்ட் 15, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது!

Related News

9948

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

”சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது” - நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கம்
Tuesday February-25 2025

’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...

Recent Gallery