Latest News :

நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகும் ‘என்ன விலை’!
Monday August-12 2024

மலையாள நடிகையான நிமிஷா விஜயன், தற்போது தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்து இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவராக உருவெடுத்துள்ளார். ‘சித்தா’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவத்தை ஈர்த்த நிமிஷா விஜயன் தற்போது ‘என்ன விலை’ என்ற திரில்லர் மற்றும் குடும்ப டிராமா ஜானர் படத்தில் முதன்மை நடித்து வருகிறார்.

 

பகத் பாசில் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மலையாளத் திரைப்படம் ‘தொண்டிமுதலும் த்ரிக்சாக்‌ஷியும்’ படத்தின் திரைக்கதைக்காக கேரள மாநில திரைப்பட விருது வென்ற திரைக்கதையாசிரியர் சஜீவ் பழூர், இப்படத்தின் கதை எழுதி இயக்குகிறார்.

 

நடிகர் கருணாஸ் இதுவரை நடித்திரான மிக வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில்,ஒய்.ஜி. மகேந்திரன், மொட்ட ராஜேந்திரன், விஜயலட்சுமி, ஷாஷா, பிரவீனா, கமலேஷ், கோலி சோடா பாண்டி, ஜே.எஸ்.கவி, மோகன் ராம், நிழல்கள் ரவி, பிரவீனா, விவியனா, சேத்தன் குமார், கவிதாலயா கிருஷ்ணன், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், லொள்ளு சபா சுவாமிநாதன், கொட்டாச்சி, தீபா சங்கர், சித்த தர்ஷன், கவி நக்கலிட்டிஸ், கேபிஒய் கோதண்டம், பசுபதி ராஜ், சூப்பர்குட் சுப்ரமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

கலமாயா பிலிம்ஸ் சார்பில் ஜிதேஷ்.வி தயாரிக்கும் இப்படத்திற்கு ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். கே. சிவகிருஷ்ணா கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 

 

Enna Vilai

 

படம் குறித்து தயாரிப்பாளர் ஜிதேஷ்.வி கூறுகையில், “நடிப்பின் மீது நிமிஷா சஜயன் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அவரின் அபரிமிதமான வளர்ச்சி நான் எதிர்பார்த்தது தான். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களிலிருந்தே அவர் சவாலான கதாபாத்திரங்கள் நடிப்பதை விரும்பி செய்தார். தனது இயல்பான நடிப்பால் அவர் ஏற்று நடித்த கதபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தார். இத்தகைய திறமையான நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மேலும், ’என்ன விலை’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும்” என்றார்.

 

இயக்குநர் சஜீவ் பழூர் கூறுகையில், “’என்ன விலை’ படம் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். குறிப்பாக, நிமிஷா சஜயன் போன்ற திறமையான பல நடிகர்கள் படத்தில் இருப்பதால் படப்பிடிப்பு மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன், நிமிஷாவுடன் 'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்' என்ற படத்தில் வேலை பார்த்துள்ளேன். ஆனால் இப்போது திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் இரண்டிலுமே அவரது பேக்-டு-பேக் ஹிட் கொடுத்து நடிகையாக அவர் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளார். ’என்ன விலை’ திரைப்படம் ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான மற்றும் புதிய நிமிஷாவைக் காண்பிக்கும்” என்றார். 

 

ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியில் தொடங்கிய இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கோகுலம் ஸ்டுடியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெறும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடர்ந்து, 12 நாட்கள் சென்னை மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை தொடர உள்ள படக்குழுவினர் இம்மாத இறுதிக்குள் முழு படப்பிடிப்பையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர்.

Related News

9949

’பரோஸ்’ ஒரு மேஜிக் உலகிற்கு உங்களை அழைத்துச் செல்லும் - நடிகர் மோகன்லால் உறுதி
Tuesday December-24 2024

ஆஷிர்வத் சினிமாஸ் சார்பில், ஆண்டனி பெரும்பாவூர் தயாரிப்பில், மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும், 3டி பிரம்மாண்ட ஃபேண்டஸி திரைப்படமான 'பரோஸ்' திரைப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது...

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

Recent Gallery