Latest News :

விஜயின் ‘கோட்’ படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது!
Friday August-16 2024

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில்  உருவாகியுள்ள ’கோட்’ திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ‘கோட்’ படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 (நாளை) வெளியிடப்படும் என்று தயாரிப்பு தரப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிட்டார்கள்.

 

இது குறித்து கூறிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, ”ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது.” என்றார்.

 

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் 'கோட்' விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு  என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

விஜய்யின் 68வது படமான 'கோட்', அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

9953

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

”சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது” - நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கம்
Tuesday February-25 2025

’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...

Recent Gallery