அப்பா மீடியா தயாரிப்பில் 'எங்க அப்பா' என்ற தலைப்பில் மியூசிக்கல் ஆல்பம் தயாராகி உள்ளது. இதில் ஐந்து வயது குட்டி நடிகை லக்ஷனா ரிஷி நடித்துள்ளார்.
லக்ஷனா ரிஷி இரண்டு வயதில் இருந்தே நடிப்பின் மீது பேரார்வம் கொண்டு, திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றை முகபாவனையோடு பேசி வந்தார். தற்போது 'எங்க அப்பா' படப்பிடிப்பில் மலை, காடு, நதி, அருவி ஆகிய பகுதிகளில் பயம் இல்லாமல் நடித்து, படக்குழுவினரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
அப்பாவை இறைவனாக நினைக்கும் குழந்தை. தந்தை மகள் அன்பு தான் கதை.
எழுத்து, இயக்கம் டாக்டர் எஸ்.வி.ரிஷி, ஒளிப்பதிவு ரெஜி மற்றும் கணேஷ், இசை சந்தோஷ் சாய், எடிட்டிங் பிரகாஷ் மப்பு, விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரியங்கா பாடியுள்ளார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அப்பா மீடியா.
கேரள வனப்பகுதி மற்றும் தமிழக எழில் பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. விரைவில் வெளிவருகிறது 'எங்க அப்பா'!
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...