இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘தங்கலான்’ திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித் படங்கள் என்றாலே குறிப்பிட்ட அரசியல் இருக்கும், என்பது தெரிந்தது தான் என்றாலும், தங்கலான் மூலம் அவர் பேச நினைக்கும் அரசியல் மற்றும் அதைச் சார்ந்த காட்சிகளை கையாண்ட விதத்தை ஒட்டு மொத்த ஊடகங்களும் கொண்டாடி வருகிறது. குறிப்பாக முன்னணி நாளிதழ்கள் ‘தங்கலான்’ மூலம் இயக்குநர் பா.இரஞ்சித் உருவாக்கிய புதிய உலகத்தை தமிழ் சினிமாவின் பெருமை என்று பாராட்டியுள்ளன.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் மேக்கிங் மற்றும் நடிகர் விக்ரமின் அபாரமான நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் அசுரத்தனமான இசை, நடிகைகள் மாளவிகா மோகனனின் வித்தியாசமான பாத்திர படைப்பு, நடிகை பார்வதி மேனனின் நடிப்பு என படத்தின் அனைத்து அம்சங்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
தமிழகத்தை கடந்து ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் வட இந்திய மாநிலங்களில் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படம் வெளியாகி மூன்று நாட்களில் ‘தங்கலான்’ படத்தின் வசூல் ரூ.50 கோடியை கடந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...