நேர்மையே மனிதனின் மொழி என அனைவரும் உணரும் வகையில் சமுத்திரக்கனி , பாரதிராஜா, தம்பிராமையா, நாசர், கருணாகரன், ஶ்ரீமன், இளவரசு, சாம்ஸ், சந்துரு, அனன்யா, ரேஷ்மா, வடிவுக்கரசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சுகுமார் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள படம் ‘திரு.மாணிக்கம்’
இந்த படத்திற்காக ’சீதா ராமம்’ பட புகழ் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் இசையால் இதயங்களை உருக வைக்கும் விதமாக நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களை வைத்து பிரமாண்டமாக ஹங்கேரியில் உள்ள புத்தா பெஸ்ட் நகரத்தில் உயிரோட்டமான பின்னணி இசையை இரவு பகல் பாராது உருவாக்கியுள்ளார். அது இணையத்தில் வைரலாகி பார்வையாளர்களை பரவசப்படுத்திக்கொண்டிருக்கிறது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரு.மாணிக்கம் படத்தை ஜி.பி. ரேகா ரவிக்குமார், ஜிந்தா கோபால கிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில் ஆகியோர் தயாரித்து உள்ளார்கள்.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...