நெய்யர் ஃபிலிம்ஸ் சார்பில் கிரீஷ் நெய்யர் தயாரிப்பில் ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விருந்து’. இதில், கிரீஷ் நெய்யர், நிக்கி கல்ராணி, ஹரீஷ் பெராடி, சோனா நாயர், அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
கதாநாயகியின் அம்மா, அப்ப மர்ம மரணத்தில் இருக்கும் ரகசியம், கதாநாயகியை துரத்தும் கொலையாளிகள் என விறுவிறுப்பான திரைக்கதை எழுதி, சாகசங்கள் நிறைந்த காட்சிகள் நிறைந்த திரைப்படமாக இயக்கியிருக்கிறார் கண்ணன் தாமர கண்ணன்.
இப்படத்தின் வசனத்தை பள்ளத் எழுத, ரதீஷ் வெகா மற்றும் சனந்த் ஜார்ஜ் கிரேஸ் இசையமைத்துள்ளனர். வி.டி.ஸ்ரீதர் படத்தொகுப்பு செய்ய, சஹாஸ் பாலா கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளார்.
முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியிருந்தாலும் குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியிருக்கும் ‘விருந்து’ வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...