கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி, இளைஞர்களின் யூத் ஐகான் ஆக கொண்டாடப்படும், ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ’ரிட்டர்ன் ஆப் தி டிராகன்’ (Return Of The Dragon) என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. டார்கியு எண்டர்டெயினமெண்ட் (Torque Entertainment) மற்றும் ராஜ் மெலோடிஸ் நிறுவனங்கள் இணைந்து, மிகப்பிரம்மாண்டாமான முறையில், கோயம்புத்தூரின் மிகபெரிய கொடிசியா மைதானத்தில், இந்நிகழ்ச்சியை நடத்தவுள்ளது.
தமிழ் சுயாதீன இசைத்துறையில் ராப் பாடகராக அறிமுகமாகி, தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளராகவும், நாயகனாகவும் உயர்ந்து, இன்றைய இளைஞர்களின் யூத் ஐகான் ஆக மாறியுள்ளவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசைக்கச்சேரிக்கு உலகம் முழுதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. ’ரிட்டர்ன் ஆப் தி டிராகன்’ எனும் பெயரில் லண்டன், மலேசியா என உலக நாடுகளில் வெற்றிகரமாக இசைக்கச்சேரி முடிந்த நிலையில் தற்போது தன் சொந்த ஊரான கோயம்புத்தூரில் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.
டார்கியு எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ராஜ் மெலோடிஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தவுள்ளன. இந்த இசை நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் ரசிகர்களுக்கென பிரத்தியேகமாக பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ரசிகர்களுக்கு, இனிப்பான செய்தியாக வந்துள்ள இந்த இசை நிகழ்ச்சி இப்போதே ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை விதைத்துள்ளது.
இந்த இசை நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் கலந்துகொள்ளும் வகையில், முழுப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது, மேலும் இதற்கு முன்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட சிக்கல்கள், எதுவும் இவ்விழாவில் ஏற்படாதவாறு, அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்துரில் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கான டிக்கெட்களை, ஆன்லைனில் Paytm ஆப் மூலம் எளிதாக பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...