Latest News :

38 நாட்களில் முடிக்கப்பட்ட ‘2கே லவ் ஸ்டோரி’ படப்பிடிப்பு!
Tuesday August-27 2024

சிட்டி லைட்  பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், முன்னணி இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகும் திரைப்படமான ‘2K லவ்ஸ்டோரி’ படத்தின் முழுப்படப்பிடிப்பும், நிறைவடைந்தது. படக்குழுவினர் 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து அசத்தியுள்ளனர். 

 

தமிழ் திரையுலகில் தனித்துவமான படைப்புகள் மூலம், ரசிகர்களின் மனதை வென்ற, இயக்குநர் சுசீந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ரொமான்ஸ் ஜானரில், இப்படத்தை இயக்கியுள்ளார். 2K தலைமுறையின் காதல், நட்பு, என அவர்களது வாழ்வை பிரதிபலிக்கும் அழகான படைப்பாக இப்படம் உருவாகி வருகிறது. 

 

வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 

 

புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்  மீனாட்சி கோவிந்தராஜான் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன்  பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, சிங்கமுத்து, ஜிபி முத்து மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

 

சமீபத்தில் துவங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு,  கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலகட்டத்திற்கு முன்பாகவே 38 நாட்களில் படப்பிடிப்பை முடித்து, அசத்தியுள்ளது படக்குழு. 

 

இபப்டத்தின் மூலம் இசையமைப்பாளர் டி.இமான் மற்றும் இயக்குநர் சுசீந்திரன் 10 வது முறையாக இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

வி.எஸ்.ஆனந்த கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் பாடல்களை கார்த்திக் நேதா எழுதியுள்ளார். தியாக படத்தொகுப்பு செய்ய, சுரேஷ் பழனிவேலு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஷோபி பால்ராஜ் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

Related News

9974

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

”சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது” - நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கம்
Tuesday February-25 2025

’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...

Recent Gallery