தமிழ் சினிமாவின் முன்னணி படத்தொகுப்பாளர் ரூபன், இளம் திறமையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ‘ரூபன் டிரைய்லர் ஹவுஸ்’ ( RUBEN TRAILER HOUSE) என்ற பெயரில் குறும்பட விழா ஒன்றை அறிவித்துள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புகிறவர்கள், 15 முதல் 30 நிமிடங்கள் இருக்கும்படியான குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும். கதைக்களம் எந்த ஜானரிலும் இருக்கலாம், ஒரு நபர் எத்தனை குறும்படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த குறும்படங்களுக்கு ஆங்கிலத்தில் சப்-டைடில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
https://qr.me-qr.com/GgVUuF5q? என்ற இணையதளம் மூலம் குறும்படங்களை அனுப்பலாம். குறும்படங்களை செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...
தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...
’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...