Latest News :

யோகி பாபு , லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மலை’ செப்டம்பர் மாதம் வெளியாகிறது!
Tuesday August-27 2024

‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லெமன் லீப் கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கனேஷ் மூர்த்தி, சவுந்தர்யா கணேஷ் மூர்த்தி தயாரித்திருக்கும் படம் ‘மலை’. இதில் யோகி பாபு மற்றும் லட்சுமி மேனன் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் காளி வெங்கட், அறிமுக குழந்தை நட்சத்திரம் சதுர்த்திகா கணேஷ் மூர்த்தி நடித்திருக்கிறார்கள். 

 

அறிமுக இயக்குநர் ஐ.பி.முருகேஷ் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைத்திருக்கிறார். 

 

மனித வாழ்வானது இயற்கையோடு இணைந்தது , மனிதர்களை போல விலங்குகளும், தாவரங்களும் மலைகளும் , ஆறுகளும் நீர் நிலைகளும்  இந்த பூமியில் அதிமுக்கியமானதாக இருக்கிறது. அதீத மனித ஆசையால் இயற்கையை மெல்ல மெல்ல மனிதர்கள் தங்கள்  சுயநலத்திற்காக அழித்து வந்துள்ளார்கள்.

 

மனிதன் முதலில் தன் சுய நலத்துக்காக சுரண்ட ஆரம்பித்தது சக மனிதனிடமிருந்துதான். அப்படி இரக்கமில்லாமல் சுரண்ட ஆரம்பிக்கும் மனிதன் மெல்ல மெல்ல இயற்கை வளங்களை சுரண்ட ஆரம்பிக்கிறான். இதிலிருந்து தப்பிக்க அதிகாரம், அரசியல், மதம், சாதி , இனம் என்று இதற்கு பின்னால் நின்றுகொண்டு சக மனிதர்கள் மீது அன்பை மறந்து எதிர்கால சந்ததியினரின் வாழ்வை குறித்து கவலைப்படாமல் மனித பேராசை இயற்கையை மொத்தமாக இன்று அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

 

தமிழக மலைக்கிராமம் ஒன்றில் நடக்கும் இந்த கதை மனிதனின் சுய நல கோரப்பசிக்கு இயற்கையின் பதில் என்ன? என்பதைப்பற்றிய ஒரு படைப்பாக வந்திருக்கிறது.

 

வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ‘மலை’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள படக்குழு விரைவில் படத்தின் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

Related News

9985

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery