Latest News :

நடிகர் விக்ரம் வைத்த தடபுடல் விருந்து! - யாருக்கு தெரியுமா?
Thursday August-29 2024

பா.இரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியாகி தமிழகம் மட்டும் இன்றி தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘தங்கலான்’ திரைப்படம் செப்டம்பர் 6 ஆம் தேதி வட இந்திய மாநிலங்களில் வெளியாக உள்ளது. 

 

படத்தில் விக்ரமின் நடிப்பை ஊடகங்களும், மக்களும் வெகுவாக பாராட்டியது மட்டும் இன்றி, தங்கலான் கதாபாத்திரத்திற்காக அவரது மெனக்கெடல் மற்றும் கடின உழைப்பு படம் பார்த்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. நட்சத்திர அந்தஸ்து கொண்ட உச்ச நடிகர் ஒருவர் இதுபோன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதே மிகப்பெரிய விசயம் என்ற ரீதியில், அந்த கதாபாத்திரத்திற்காக நடிகர் விக்ரம் தன்னை அர்ப்பணிக்கொண்ட விதத்தை பார்த்து திரையுலக வியப்படைந்தது.

 

அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மட்டும் இன்றி படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக தயாரிப்பு தரப்பு மேற்கொண்ட அனைத்து விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொண்டு பம்பரமாக சுழன்ற நடிகர் விக்ரம், படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகும் தனது வேலையை பார்க்காமல், அப்படத்திற்காக உழைத்தவர்கள் மற்றும் உறுதுணையாக நின்றவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் அவர்களை கொண்டாடி வருகிறார்.

 

அதன்படி, ’தங்கலான்’ படத்தின் வெற்றிக்காக படத்தில் கடினமாக பணியாற்றிய அனைத்து நடிகர்கள், நடிகைகள், உதவி  இயக்குநர்கள், கலை இயக்குநர்கள் , அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார். 

 

இதனைத் தொடர்ந்து சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் வளாகத்தில் உள்ள கலையரங்கத்திற்கு வருகை தந்த 500-க்கும் மேற்பட்டவர்களை சீயான் விக்ரம் வரவேற்றார். பின்னர் படத்தில் கடுமையாக உழைத்ததற்காக அங்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் தம்முடைய நன்றியை தெரிவித்தார் சீயான் விக்ரம். இதற்கு முன் 'தங்கலான்' படக்குழுவினருக்கு மிகவும் பிடித்த உணவு வகைகளை சீயான் விக்ரம் அவர்களிடமே கேட்டு அறிந்து தேர்வு செய்து, அந்த உணவு வகைகளை பிரபலமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜிடம் வழங்கியிருந்தார். அவருடைய கைப்பக்குவத்தில் உருவான சிறப்பு விருந்தினை தன்னுடைய நன்றியினை தெரிவிக்கும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது கையாலேயே உணவினை பரிமாறினார் சீயான் விக்ரம்.

 

Vikram Thangalaan Virundhu

 

சீயான் விக்ரமின் இந்த செயலால் படத்தில் பணியாற்றிய அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக தொழிலாளர் குடும்ப உறுப்பினர்கள் சீயான் விக்ரமுடன் பேசி மகிழ்ந்ததுடன், செல்ஃபியும் எடுத்துக் கொண்டனர். 

 

இந்த நிகழ்வில் சீயான் விக்ரமுடன் 'தங்கலான்' படத்தில் நடித்த நடிகைகள் மாளவிகா மோகனன், பார்வதி, நடிகர் பசுபதி, படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் திருமதி. நேகா ஞானவேல் ராஜா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் தந்தை கே. ஈஸ்வரன், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனஞ்ஜெயன், இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

 

பொதுவாக ஒரு திரைப்படம் வெற்றி பெற்றால் வெற்றி பெற செய்தமைக்காக ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிப்பது வழக்கம்… ஆனால், சீயான் விக்ரம் 'தங்கலான்' பட வெற்றிக்காக அப்படத்தில் கடுமையாக உழைத்த அனைவருக்கும் மற்றும்  அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து, விருந்தோம்பல் செய்து, நன்றி தெரிவித்தது, அனைவரது கவனத்தையும் கவர்ந்ததுடன் ஆச்சரியத்தையும் அளித்தது!

 

சீயான் விக்ரம் அளித்த விருந்து, திருமண விருந்தை விட தடபுடலாக சிறப்பாக இருந்தது என வருகை தந்த அனைவரும் உண்டு, மகிழ்ச்சி அடைந்தனர். அனைவரும் தங்கலானுக்கு ( சீயான் விக்ரம் ) நன்றி தெரிவித்து விடை பெற்றனர்.

Related News

9989

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery