Latest News :

பிரமிப்பில் ஆழ்த்தும் டோவினோ தாமஸின் ’ஏஆர்எம்’ பட டிரைலர்!
Sunday September-01 2024

மலையாள முன்னணி நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில், பான் இந்திய படைப்பாக, மலையாள சினிமா வரலாற்றில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் ‘ஏ.ஆர்.எம்’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகரக்ளை பிரமிப்பி லாழ்த்தியுள்ளது. 

 

’மின்னல் முரளி’ மற்றும் ’2018 - எவ்ரி ஒன் இஸ் எ ஹீரோ’ ஆகிய படங்களின் மூலம் இந்தியா முழுதும்  கவனத்தை ஈர்த்த டோவினோ தாமஸ், அடுத்ததாக பிரம்மாண்டமான ’ஏ.ஆர்.எம்’ (ARM) எனும் - ஒரு பான்-இந்தியா ஃபேன்டஸி திரைப்படம் மூலம் அசத்தவுள்ளார். 

 

மேஜிக் பிரேம்ஸ் மற்றும் யுஜிஎம் மோஷன் பிக்சர்ஸ் பேனர்களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஜிதின் லால் இயக்கத்தில் டாக்டர். ஜகாரியா தாமஸ் உடன் இணைந்து லிஸ்டின் ஸ்டீபன் தயாரிக்கும் இப்படம், முழுக்க முழுக்க 3டியில் உருவாகியுள்ளது. மலையாள வரலாற்றில் தொழில்நுட்ப ரீதியாக மிகப் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, படத்தின் மீது, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. தற்போது வெளியிடப்பட்ட டிரைலர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சத்திற்கு எடுத்து சென்றுள்ளது. 

 

இந்த டிரைலரில் பூமியைத் தாக்கும் ஒரு சிறுகோள், ஒரு பெரிய வெடிப்பை ஏற்படுத்துகிறது மற்றும் வானத் துகள்களை சிதறடிக்கும் ஒரு அற்புதமான படத்துடன் டிரைலர் தொடங்குகிறது, ஒரு வயதான பெண்மணி கதையை விவரிக்கிறார். அதன்பிறகு நடக்கும் வன்முறையையும், நம் கதாநாயகனின் வலிமையான அறிமுகத்தையும் டிரைலர்  நமக்கு காட்டுகிறது. 

 

2 நிமிடம், 33 வினாடிகள் கொண்ட இந்த  டிரைலர், 1900, 1950, மற்றும் 1990 ஆகிய காலகட்டங்களில் வடக்கு கேரளாவில் நடந்த  ஒரு கதையை விரிக்கிறது. டொவினோ மூன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில்  தோன்றுகிறார். வெவ்வேறு தலைமுறைகளான  மணியன், குஞ்சிக்கெழு மற்றும் அஜயன்— என ஒவ்வொருவரும் ஒரு முக்கிய நிலப் பொக்கிஷத்தைப் பாதுகாக்க பாடுபடுகிறார்கள். டிரைலரின் ஒவ்வொரு பிரேமும் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கேரளாவின் செழுமையான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் அதே வேளையில், ஒரு காவிய கதையின் உலகை நம் கண்ணுக்கு விருந்தளிக்க கூடிய,  ஒரு அழுத்தமான கதையுடன் கூடிய புதுமையான அனுபவமாக ’ஏ.ஆர்.எம்’ திரைப்படம் இருக்கும் என்பதை இந்த டிரைலர் உறுதிப்படுத்துகிறது.

 

இப்படம் டோவினோ தாமஸ் நடிப்பில், உருவாகும்  50 வது படமென்பது குறிப்பிடத்தக்கது. மூன்று கதாப்பாத்திரங்களில் ஒவ்வொன்றையும் தனித்து காட்டும் அவரது அர்ப்பணிப்பு, டிரைலரிலேயே தெளிவாகத் தெரிகிறது. திரையரங்குகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும், அதிரடி சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக, களரிப்பயட்டில் விரிவான பயிற்சி பெற்றுள்ளார் டொவினோ. 

 

கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சுரபி லட்சுமி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் பாசில் ஜோசப், ஜெகதீஷ், ஹரிஷ் உத்தமன், ஹரிஷ் பெராடி, பிரமோத் ஷெட்டி மற்றும் ரோகினி ஆகியோரும் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

 

ஜோமோன் டி திரைக்கதையில். ஜானின் ஒளிப்பதிவில், பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் ’கந்தாரா’ புகழ் விக்ரம் மூர் மற்றும் பீனிக்ஸ் பிரபு ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்ட பரபரப்பான சண்டைக்காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. சுஜித் நம்பியார் திரைக்கதை எழுத, திபு நைனன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

 

 

மலையாளம், இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என ஆறு மொழிகளில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஏ.ஆர்.எம்’ படத்தின் கன்னட பதிப்பை ஹோம்பாலே பிலிம்ஸும், தெலுங்குப் பதிப்பை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இந்தி பதிப்பை அனில் ததானியின் ஏஏ பிலிம்ஸ் என இந்திய திரையுலகின் முன்னணி நிறுவனங்கள் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

Related News

9993

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery