Latest News :

கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட ‘பாம்’ பட முதல் பார்வை!
Sunday September-01 2024

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ பட இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ் நாயகனாகவும், ஷிவாத்மிகா ராஜசேகர் நாயகியாகவும் நடித்திருக்கும்‘பாம்’ திரைப்படத்தில் நாசர், காளி வெங்கட், அபிராமி, சிங்கம்புலி,   பால சரவணன், டி.எஸ்.கே, கிச்சா ரவி, பூவையார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், டி.இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

 

எஸ்.ஆர்.எம் கல்லூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நடிகர் அர்ஜூன் தாஸ் படம் குறித்து பேசுகையில், ““பாம் மிக ஸ்பெஷலான படம், கதை கேட்டவுடன் எனக்குப் பிடித்தது. இமான் சார்  இப்படத்தில் ஒப்புக்கொண்டு இசையமைத்தது மகிழ்ச்சி. அவர் தான் நான் சரியாக இருப்பேன் எனறு கூறியுள்ளார். ஷிவாத்மிகாவிற்கு வாழ்த்துக்கள். GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், இன்னும் நிறைய நல்ல படம் செய்ய வாழ்த்துக்கள். இந்தப்படம் மிக ஜாலியான படமாக வந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் இமான் பேசுகையில், “உங்கள் கனவுகள் நனவாக என் வாழ்த்துக்கள். பாம் ரொம்பவும் சுவாரஸ்யமான படம், GEMBRIO நிறுவனத்தின் முதல் படத் தயாரிப்பில் நான் இணைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது, இந்தப் படத்தின் கதையை கேட்டவுடனே பிடித்தது, உடனே ஒப்புக்கொண்டேன். விஷால் இன்னும் நல்ல படங்கள் செய்வார், பெரிய இடத்திற்கு செல்வார். அர்ஜுன் தாஸ் இன்னும் பல உயரம் தொட வாழ்த்துக்கள். ஷிவாத்மிகா உங்கள் அப்பாவின் பெயரைக் காப்பாற்றி வருகிறீர்கள் வாழ்த்துக்கள். படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துகள், இயக்குநர் கதைக்கு மட்டுமல்லாமல், படத்தில் சின்ன சின்ன நுணுக்கங்களிலும் கவனம் கொண்டு அதற்கென மெனக்கெடல் போட்டுள்ளார், படம் மிக  நல்ல படமாக வந்துள்ளது. மேஜிக்கல் எண்டர்டெயினராக இருக்கும். தயாரிப்பாளர் சுதாவிற்கு வாழ்த்துகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சுதா சுகுமார் பேசுகையில், “GEMBRIO PICTURES நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இப்படம், நல்லதொரு குழுவின் உழைப்பில், மிக சிறந்த படைப்பாக இப்படம் வந்துள்ளது. இப்பட டீம் அனைவருக்கும் என் நன்றிகள். கதை கேட்டபோதே மிகவும் பிடித்தது. மாணவர்கள் மத்தியில் பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மகிழ்ச்சி. இமான் சார் சிறப்பான இசையை தந்துள்ளார். படம் உங்களுக்கும் கண்டிப்பாக பிடிக்கும். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் டி எஸ் கே பேசுகையில், “மிக மிக சந்தோசமாக இருக்கிறது. டீவியில் சின்ன சின்னதாக செய்து கொண்டிருந்த என்னை நம்பி விஷால் சார் எனக்கு வாய்ப்பு தந்துள்ளார் நன்றி. இமான் சாரின் தீவிர ரசிகன் நான், படத்தில் அசத்தியுள்ளார். அர்ஜூன் தாஸ், அற்புதமாக நடித்துள்ளார், இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

பூவையார் பேசுகையில், “எனக்கு வாய்ப்பளித்த விஷால் அண்ணாவிற்கு நன்றி. அர்ஜூன் அண்ணாவுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறேன் அது தான் என்னை இங்கு வரை கூட்டி வந்துள்ளது. மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நன்றாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் பேசுகையில், “இயக்குநர் விஷால்  ஒரு அற்புதமான கதையை எழுதியுள்ளார், நாசர் சார் மற்றும் அர்ஜுன் தாஸுடன் இணைந்து நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, அர்ஜூன் என் ஃபேவரைட் கோ ஸ்டார். எங்கள் டீம் சார்பாக உங்களுக்கு நன்றி.   நானும் இமான் சாரின் மிகப்பெரிய ரசிகை தான். பயங்கரமான  பாடல்கள் தந்துள்ளார். படமும் மிக அட்டகாசமாக வந்துள்ளது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

இயக்குநர் விஷால் வெங்கட் பேசுகையில், “இதே கல்லூரியில் நானும் சுற்றிக் கொண்டிருந்தேன், இப்போது உங்கள் முன்னால் எங்கள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சி. பாம் ஒரு சுவாரஸ்யமான படமாக இருக்கும், ஃபன் எண்டர்டெயின்மெண்டாக இப்படத்தை உருவாக்கியுள்ளோம்.  அனைத்திற்கும் டெக்னிக்கல் குழுதான் காரணம், அவர்களுக்கு எனது நன்றி. இமான் சார் எனக்கு அண்ணன் போல் தான் இருந்தார், அவருக்கு எனது நன்றி. அர்ஜுன் தாஸ் மற்றும் ஷிவாத்மிகா உங்களுக்கும் நன்றி. GEMBRIO நிறுவனத்திற்கு என் நன்றிகள். எங்கள் இளம் குழுவிற்கு ஆதரவைத் தரும் உங்கள்  அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Related News

9996

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery