Latest News :

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் கதையில் உருவான ‘மார்டின்’! - 13 மொழிகளில் வெளியாகிறது
Tuesday September-03 2024

ஆக்‌ஷன் கிங் அர்ஜூன் கதை எழுத, இயக்குநர் ஏ.பி.அர்ஜூன் இயக்கத்தில் கன்னட சினிமாவின் முன்னணி நாயகனும், நடிகர் அர்ஜுனின் தங்கை மகனுமான துருவா சர்ஜா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘மார்டின்’. இதில் நாயகியாக வைபவி சாண்டில்யா நடித்திருக்கிறார். இவர்களுடன் அன்வேஷி ஜெயின், சிக்கண்ணா, மாளவிகா அவினாஷ், அச்யுத் குமார், நிகிதின் தீர், நவாப் ஷா, ரோஹித் பதக் ஆகியோருடன் வெளிநாட்டு நடிகர்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

வாசவி எண்டர்பிரைசஸ் சார்பில் உதய் கே.மேத்தா, சுராஜ் உதய் மேத்தா மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் ‘மார்டின்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11 ஆம் தேதி 13 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், ‘மார்டின்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் அர்ஜுன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டு படம் பற்றிய பல தகவல்களை தெரிவித்தனர்.

 

நடிகர் அர்ஜுன் படம் குறித்து பேசுகையில், “என் அன்பான துருவாவை தமிழுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. இந்தப்படத்தில் எனக்கு ரெண்டு ரோல், துருவாவின் மாமா ஆனால் அவனை நான் என் மகனாகத் தான் நினைக்கிறேன். இன்னொன்று திரைக்கதை எழுத்தாளர். துருவாவின் ஐந்தாவது படம் இது. ஒவ்வொரு படமும் பெரிய பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது. அவனுக்கென பெரிய  ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  அவனுக்கு என்ன மாதிரி கதை எழுத வேண்டுமென, நிறைய யோசித்து இந்தக்கதையை எழுதியிருக்கிறேன். உண்மையில் தயாரிப்பாளர் தான் ஹீரோ, இந்தப்படத்திற்கு அப்படி செலவு செய்துள்ளார். 100 கோடிக்கு மேல் செலவு செய்து, ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தர பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளனர். கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்.  நடிகை வைபவிக்கு என் வாழ்த்துகள். 13 மொழிகளில் இப்படம் டப்பாகி ரெடியாகி இருக்கிறது. உலகம் முழுக்க யார் பார்த்தாலும், இந்தப் படம் பிடிக்கும். ஆக்சன் எமோஷன் என எல்லாம் இருக்கிறது. வித்தியாசமான திரைக்கதை. நிறைய ஃபாரின் ஆர்டிஸ்ட் நடித்துள்ளார்கள், துருவாவிற்கு இந்தப்படம் பெரிய  பிளாக்பஸ்டர் ஆக இருக்கும். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.” என்றார்.

 

படத்தின் நாயகன் துருவா சர்ஜா பேசுகையில், “தமிழில் எனக்கு ரெண்டாவது படம், செம்ம திமிரு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மார்டின் படத்திற்கும் நல்ல ஆதரவைத் தாருங்கள், இந்தப்படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் என் நன்றி. என் காட்ஃபாதர், எனக்காக எல்லாம் செய்யும் அர்ஜூன் சாருக்கு நன்றிகள். இந்தப்படத்தை முழுமையான ஆக்சன் படமாக, புதிய தளத்தில் இருக்கும்படியான, படைப்பாக எடுத்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார்.

 

தயாரிப்பாளர் உதய் கே.மேத்தா பேசுகையில், “பிரத்தியேகமாகப் பாடல்களை முதன் முறையாக உங்களுக்குத் திரையிட்டுள்ளோம். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இருக்க வேண்டுமென, பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக  இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இந்த நீண்ட பயணத்தில், அர்ஜூன் சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். துருவா சர்ஜா இப்படத்திற்காக  மிக மிகக் கடினமான உழைப்பைத் தந்துள்ளார். இயக்குநர் மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். படம் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.” என்றார்.

 

நடிகை வைபவி சாண்டில்யா பேசுகையில், “இது எனக்கு மிகவும் சிறப்பான நாள், எங்கள் படத்தின் பாடலை பார்த்துள்ளீர்கள், இந்தப்படத்தில் வேலை பார்த்தது அற்புதமான அனுபவம், மிக சிறப்பான படமாக வந்துள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

சரிகம நிறுவனம் சார்பில் ஆனந்த் பேசுகையில், “அர்ஜூன் சார் சொன்னது மாதிரி, உலகம் முழுக்க ரசிக்கும்படியான படம் இது. எல்லோருக்கும் பிடிக்கும். 3 ஆம் தேதி இப்படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளது. கண்டிப்பாக எல்லா மொழிகளிலும் ஹிட்டடிக்கும், பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்கிய உதய் மேத்தா சாருக்கு நன்றி. துருவா இப்படத்தை பிரபலப்படுத்த முழுமையாகக் களமிறங்கியுள்ளார். கதை எழுதியுள்ள அர்ஜூன் சார் அசத்தியுள்ளார். ரசிகர்களுக்கு புதிய அனுபவமாக இப்படம் இருக்கும்.” என்றார்.

 

இப்படத்தின் பாடல்களுக்கு மணி சர்மா இசையமைக்க, பின்னணி இசையை ‘கே.ஜி.எப்’ புகழ் ரவி பஸ்ரூர் அமைத்துள்ளார். கே.எம்.பிரகாஷ் படத்தொகுப்பு செய்ய, டாக்டர் கே.ரவிவர்மா, ராம் லக்‌ஷ்மண், கணேஷ் ஆகியோர் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளனர். சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Related News

9997

செல்வராகவன் இயக்கத்தில், ஜீவி பிரகாஷ் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது!
Monday December-23 2024

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...

மக்களை மகிழ்விக்க வருகிறார் ‘மிஸ்டர்.பாரத்’!
Monday December-23 2024

சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...

சரத்குமாரின் 150 வது படமான ‘தி ஸ்மைல் மேன்’ டிசம்பர் 27 ஆம் தேதி வெளியாகிறது
Monday December-23 2024

இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...

Recent Gallery