எல்.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மருத்துவர் லோகநாதன் தயாரித்து இயக்கும் படம் ‘முன்தினம்’. இதில் பவர் ஸ்டார் சீனிவாசன் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ், ராம் ஆனந்த் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன், யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஜீவா வர்ஷினி இசையமைக்கும் இப்படத்திற்கு விபின் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். எஸ்.துர்காஷ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதை, நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணன் வெளியிட, படத்தின் நாயகன் பவர் ஸ்டார் சீனிவாசன் பெற்றுக்கொண்டார்.
விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘முன்தினம்’ படத்தை 25 எண்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.வினோத் குமார் வெளியிட உள்ளார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...