Latest News :

ஃபேண்டஸி சாகச திரைப்படமாக உருவாகும் ‘சுப்ரமண்யா’-வின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியானது!
Wednesday September-04 2024

பிரபல நடிகரும், டப்பிங் கலைஞருமான பி.ரவிசங்கர், தனது மகன் அத்வேயை ஒரு புதிய படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த, இரண்டாவது முறையாக களமிறங்கியுள்ளார்.  ’சுப்ரமண்யா’ என்று பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தை, திருமால் ரெட்டி மற்றும் அனில் கடியாலா ஆகியோர் எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் பேனர் சார்பில்  தயாரிக்கின்றனர். குணா 369 படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து, சமூக-ஃபேண்டஸி சாகச ஜானரில், இந்தப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். ஸ்ரீமதி பிரவீணா கடியாலா மற்றும் ஸ்ரீமதி ராமலட்சுமி இப்படத்தை வழங்குகிறார்கள்.

 

தயாரிப்பு நிறுவனம் ‘சுப்ரமண்யா’ படத்தின் அசத்தலான  ப்ரீ-லுக்கை வெளியிட்டு படத்தின் விளம்பர பணிகளைத் துவக்கியுள்ளது.  இந்த போஸ்டர், திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்ட கற்பனை உலகத்தின், ஒரு கண்ணோட்டத்தை நமக்கு  வழங்குகிறது. போஸ்டரில் கதாநாயகன் ஒரு தீப்பந்தத்தை பிடித்தபடி, ஒரு புதிரான சாம்ராஜ்யத்தின் நுழைவாயிலில் இருப்பதை காணலாம். போஸ்டரின் கலைவடிவமைப்பு  பசுமையாகவும், சிக்கலான அமைப்புகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் உயர்தரமான மேக்கிங்கை குறிப்பதாக அமைந்துள்ளது. இந்த அசத்தலான  ப்ரீ-லுக் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டுகிறது.

 

பிரீமியம் லார்ஜ் ஃபார்மேட் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளின் பார்வையாளர்களுக்கு சிலிர்ப்பான அனுபவத்தை வழங்குவதற்காக பெரிய பட்ஜெட்டில், மிகப்பெரிய வடிவத்தில் இப்படம் படமாக்கப்பட்டு வருகிறது. உயர்தர VFX உடன் கூடிய இந்த பிரமாண்டமான திரைப்படம், நில எல்லை மற்றும் மொழியின் அனைத்து தடைகளையும் தாண்டிய கதையுடன், அனைத்து திரை ரசிகர்களுக்கும், காட்சி மற்றும் உணர்வுப்பூர்வமான விருந்தாக இருக்கும்.

 

இத்திரைப்படத்தின் பணிகள் தற்போது 60% நிறைவடைந்துள்ளது மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள், மும்பையில் உள்ள பிரபல ரெட் சில்லீஸ் ஸ்டுடியோவில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மும்பை, ஹைதராபாத், பெங்களூர் மற்றும் சென்னையில் இருந்து பல புகழ்பெற்ற ஸ்டுடியோக்களில் VFX & CGI பணிகள் நடந்து வருகின்றன.

 

’சுப்ரமண்யா’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் கை வண்ணத்தில் உருவாகிறது. கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் இசையமைக்க, விக்னேஷ் ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் எம் குமார் எடிட்டராகவும், சப்த சாகரதாச்சே & சார்லி 777 புகழ் உல்லாஸ் ஹைதூர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

Subramanya Pre Look Posters

 

தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் ’சுப்ரமண்யா’ பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ளது.

Related News

9999

’பிறந்தநாள் வாழ்த்துகள்’ படத்தை ஓடிடியில் கொண்டாடுவார்கள் - நடிகர் அப்புக்குட்டி நம்பிக்கை
Tuesday February-25 2025

காமெடி நடிகராக அறிமுகமாகி, கதையின் நாயகனாக நடித்து தேசிய விருது வென்ற நடிகர் அப்புக்குட்டி, தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வந்தாலும், தொடர்ந்து குணச்சித்திரம், வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்...

கோலிவுட்டுக்கு குறிவைக்கும் சேலம் வேங்கை அய்யனார்!
Tuesday February-25 2025

தமிழ் சினிமாவில் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என புதியவர்களின் வருகை வழக்கமானதாக இருந்தாலும், இதில் சிலர் தங்களது நடிப்பு மற்றும் திரைப்படங்கள் மூலம் எளிதில் கவனம் ஈர்த்து விடுவார்கள்...

”சினிமா தவிர எனக்கு எதுவும் தெரியாது” - நடிகர் ஸ்ரீகாந்த் உருக்கம்
Tuesday February-25 2025

’உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதயகீதம்’, ’உயிரே உனக்காக’, ’நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் கே...

Recent Gallery