Latest News :

கோடம்பாக்கத்தில் திறக்கப்பட்ட 'ace salon & spa' - சுனைனா திறந்து வைத்தார்

23235087a05fd98ea59cfba7352608fd.jpg

தமிழகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் ஏசிஎஸ் சலூன் & ஸ்பா (ace salon & spa) தனது 10 வது கிளையை சென்னை கோடம்பாக்கத்தில் நேற்று திறந்தது.

 

சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மிக பிரபலமான சலூன் மற்றும் ஸ்பாவாக விளங்கும் ace salon & spa பெண்கள் மற்றும் ஆண்களுக்கான அனைத்துவிதமான அழகுப்படுத்தும் பணியை செய்வதோடு, உடல் ஆரோக்கியமான மசாஜ் செய்யக்கூடிய ஸ்பாவாகவும் விளங்கு வருகிறது.

 

இந்த நிறுவனத்தின் 10 வது கிளை நேற்று (செப்.30) மாலை சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் திறக்கப்பட்டது. இதை பிரபல நடிகை சுனைனா ரிப்பன் கட் செய்து திறந்து வைத்ததோடு, குத்து விளக்கும் ஏற்றினார். ace salon & spa பற்றி சுனைனா கூறும் போது, “கோடம்பாக்கம் சினிமா பிரபலங்கள் அதிகமாக வசிக்கும் இடம் என்பதால், ace salon & spa அவர்களுக்கு தேவையான ஒன்றாக இருக்கும். இந்த இடமும் ரொம்ப வசதியான இடமாக இருக்கிறது.” என்றார்.

 

ace salon & spa நிறுவனத்தின் முதன்மை அதிகாரி கார்த்திக் பேசும் போது, “வேகமான வளர்ச்சியை கண்டு வரும் ace salon & spa தமிழக மக்களின் நம்பிக்கையை பெற்று சிறப்பாக பணியாற்றி வருகிறது. வரும் 2020 ஆண்டுக்குள் 250 கிளைகள் திறக்க வேண்டும் என்பதை இளக்காக வைத்து செயல்பட்டு உழைத்து வருகிறோம்.” என்றார்.

Recent Gallery