Latest News :

கலைநயமிக்க பிரம்மாண்ட நகை கண்காட்சி - மலபார் கோல்டு அண்ட் டைமன்ஸில் இன்று தொடங்கியது

f98ef1821757c7baf1bf3db58e1d2d7d.jpg

கலைநயமிக்க பிரம்மாண்ட நகை கண்காட்சி, சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் இன்று (அக்.12) தொடங்கியது. இந்த கண்காட்சி வரும் அக்டோபர் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

இன்று தொடங்கிய இந்த கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஷாலின் அம்மா தேவி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்தனர். மேலும் இதில் மலபார் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

 

மலபார் கோல்டு அண்ட் டைமன்ட்ஸ் நிறுவனத்தின் அழகிய வேலைபாடுகளுடன் கூடிய கலைநயமிக்க தங்கம், வைரம் மற்றும் விலைமதிப்பு வாய்ந்த கற்களால் செய்யப்பட்ட  நகைகளின் கண்காட்சி உங்களது ஷாப்பிங் அனுபவத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். அனைத்து தருணங்களிலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அணிந்து செல்லக்கூடிய பலவிதமான வடிவங்களில் இந்த நகைகள் கிடைக்கும்.  நாள்தோறும் அணியக்கூடிய வைரம், விலைமதிப்புமிக்க கற்றகளால் வடிவமைக்கப்பட்ட நகைகள், பாரம்பரியத்தை போற்றக்கூடிய நகைகள், குந்தன் நகைகள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய மீனாகரி, வெட்டப்படாத வைரம் மற்றும் பிளாட்டினத்தால் ஆண்களுக்கான நகைகள் உள்ளிட்ட நகைகள் இந்த கண்காட்சியில் இடம் பெறும். 

 

தலைசிறந்த நவை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்தகலைஞர்களின் நிபுணத்துவத்தையும்  தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிருபிக்கும் வகையிலும் உள்ளன.  மலபார் கோல்டு அன்ட் டைமன்ட்ஸ் நிறுவனம் வடிவமைத்த பிரத்யோக  நகைகள் இந்த கண்காட்சியில் இடம்பெறுவது சிறப்பம்சமாகும். எக்காலத்திலும் அணிவதற்கு சிறப்பு சேர்க்கக்கூடிய நகைகள் இங்கு கிடைக்கும். 

 

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும்  வைர நகைகளான ‘மைன்’, பிரம்மாண்டமான  வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட ‘எரா’ வகை வைர நகைகள், நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை  வடிமைப்புகளில் உருவான டிவைன், கை வினை கலைஞர்களால்  கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலைஉயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’பாரம்பரிய நகைகளின் தொகுப்பான ‘டிவைன்’ குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ ஆகியவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

 

இதுவரை நீங்கள் பார்த்திராத முற்றிலும் புதுமையான வடிவங்களில் உருவாக்கப்பட்ட நகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தவேண்டும் என்பதே இதுபோன்ற கண்காட்சிகளை நாங்கள் நடத்துவதற்கு முக்கிய நோக்கம் என்று மலபார் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அஷெர் ஓ கூறினார். 

 

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பற்றி:

 

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் பிஐஎஸ் சான்று பெற்ற 916 தங்க நகைகளையும்  ஐஜிஐ சான்று பெற்ற வைர நகைகளையும் பிஜிஐ சான்று பெற்ற பிளாட்டிண நகைகளையும் ஹால்மார்க் சான்று பெற்ற வெள்ளி நகைகளையும் மட்டுமே விற்பனை செய்கிறது. அனைத்து நகைகளும் வெளிப்படையான விலை, நிகர எடை, கற்களின் எடை, செய்கூலி, கற்களுக்கான கூலி, அதன் நிகர எடை ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடும் பட்டியலுடன்  வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நகையின் தயாரிப்பு குறித்தும்  விலையையும்  எளிதாக புரிந்து கொண்டு வாங்குவதற்கு திட்டமிடலாம். வாடிக்கையாளர்கள் வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, ஒராண்டு இலவச காப்பீடு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெற்றுக்கொள்ளும் உத்தரவாதம் என மதிப்புமிக்க சேவையை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் வழங்குகிறது. 

 

இவைதவிர மலபார் கோல்டு அன்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான வணிகத்திற்கு அதன் சமூகப்பொறுப்பு முன்முயற்சிகள்

இதர காரணங்கள் ஆகும். தனது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி, சுற்றுச்சுழல்பாதுகாப்பு, மற்றும் மகளிரை அதிகாரமயமாக்குதல் என சமூக பொறுப்பு திட்டங்களுக்கு  செலவு செய்கிறது.

 

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 9 நாடுகளில் 193 சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது. 

Recent Gallery