Latest News :

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை!

69d5b6f02c3fc1589c77ec7aa6101d90.jpg

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில், சற்று நேரத்திற்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒபிசைனி முதலில் தீர்ப்பின் சாரம்சத்தை வாசித்தார். இதன்படி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகிய இருவர் உள்பட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

இந்த தீர்ப்பு திமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள்.

Recent Gallery