மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் புதிய புரட்சியாக, கிடைக்காத பொருட்களே இல்லாத நிலையை உருவாக்கும் விதத்தில் தொடங்கப்பட்டிருக்கும் புதிய ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம். (festoo.com) சென்னையை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்நிறுவனம் தான் தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் சில ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களாகவும், வட இந்திய நிறுவனங்களாகவும் உள்ள நிலையில், தென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் நிறுவனமாக தொடங்கப்பட்டிருக்கும் festoo.com நிறுவனம் இன்று (பிப்.21) சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், மாமிசங்கள், மீன் வகைகள், ஆடைகள் என 35000 க்கும் மேற்பட்ட பொருட்களைக் கொண்ட இந்நிறுவனத்தில் தோசை மற்றும் இட்லி மாவு போன்ற சாதாரண பொருட்களும் விற்கப்பட உள்ளது.
மேலும், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் விலையை விட பல சலுகைகளோடு காய்கறிகள் விற்கப்படுவதோடு, தூய்மையான முறையில் பேக் செய்யப்பட்டு டெலிவரி செய்வது தான் festoo.com நிறுவனத்தின் தனிச்சிறப்பு.
மற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தங்களிடம் வரும் ஆர்டரை வியாபாரிகளுக்கு அனுப்பி அவர்கள் மூலமாகவே பொருட்களை டெலிவரி செய்வார்கள். ஆனால், festoo.com நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் ஆர்டர் பொருட்களை தங்களது நிறுவனத்திற்கு வர வைத்து, அவற்றின் தரத்தை சோதித்து பார்த்த பிறகே, பேக் செய்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.
இதற்காகவே சென்னை முழுவதும் 200 அவுட்லேட்களை இந்நிறுவனம் திறந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் festoo.com நிறுவனம் மூலம் ஆர்டர் கொடுக்கும் பொருட்கள் ஒரு மணி நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சென்றடையும்.
தற்போது சென்னையில் அவுட்லேட்களை தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் தொடங்குவதோடு, கர்நாடகா, ஆந்திரா என்று தென்னிந்தியா முழுவதும் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வியாபாரம் என்ற நோக்கில் மட்டும் செயல்படாமல், பிறருக்கு தொழில் செய்ய வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும் festoo.com நிறுவனம், தங்களது டெலிவரி அவுட்லேட்களை பிராஞ்சஸ் கொடுக்கவும் முடிவு செய்துள்ளது. இதனால் குறைந்த முதலீட்டில் நிரந்தர லாபம் பெறும் தொழிலை பிறருக்கு ஏற்படுத்தி கொடுப்பதோடு, டெலிவரி பணியை மேற்கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் வேலைவாய்ப்பால், மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கிறது.
அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட festoo.com நிறுவனம் தங்களது பிராண்ட் பிரத்யேகமாக இருக்க வேண்டும் என்பதற்காக சர்வதேச கட்டமைப்போடு தொடங்கப்பட்டுள்ளது.