தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ‘தமிழ் முற்றம்’ அமைப்பின் 4ம் ஆண்டு விழா, சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெற்றது. விஸ்வ ஹிந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் மானனீய வேதந்தம் ஜி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், மொரீஷியஸ் நாட்டு துணை தலைவர் பெர்லின் வையாபுரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.
பேராசிரியை ராஜ ஜெயந்தி வரவேற்புரை நிகழ்த்திய இவ்விழாவில், நாட்டிய மயூரி குமாரி ஹரினி பரதநாட்டியம் ஆடி அனைவரையும் வரவேற்றார். ஹிந்து வித்யாலயாக்களின் முதன்மை முதல்வர் டாக்டர் திருமதி.கிரிஜா சேஷாத்ரி குத்துவிளக்கு ஏற்றினார். செழியன் குமாரசாமி அவர்கள் சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி வைத்தார். திருமதி நிர்மலா ரவி திருமுறைகளை பாடினார். புலவர் திருமதி வஸந்தா ஜெகதிசன் ஆண்டறிக்கை வாசித்தார். தலைமை உரையில் மானனீய வேதாந்தம் ஜி அவர்கள் தமிழ் முற்றம் தொடப்பட்டதன் நோக்கத்தையும் எதிர்காலத்தில் பெற்றோர்கள் தன் மக்களால் கவனிக்கப்பட மாட்டார்கள் என்ற செய்தியை மகாபாரதக் கதையின் மூலம் எடுத்துக் கூறினார்.
டாக்டர் கிரிஜா சேஷாத்ரி பேசுகையில், முன்பு ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில் மட்டுமே பாடங்கள் படித்தோம். ஆறாம் வகுப்பில் தான் ஆங்கிலம் ஒரு பாடமாக வரும். ஆனால் இப்போது முதல் வகுப்பிலேயே ஆங்கிலம் பயிலத் தொடங்கி விடுகின்றார்கள். மகாகவிக்குப் பின் தமிழகத்தில் மகாகவிகள் தோன்றவில்லை.” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தமிழ்பண்பாட்டுக் கழக மலர் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டனர். அடுத்து ஐ.ஏ.எஸ் செல்லமுத்து அவர்கள் தனது உரையில் தமிழ்நாட்டு சரித்திரத்தை எல்லா மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், தமிழ் பண்பாட்டுக் கலாச்சார வலர்ச்சிக்குத் தேவையானதைச் செய்வதோடு தமிழின் மேன்மைக்காகவும் தமிழ் முற்றம் என்ற அமைப்பு மானனீய வேதாந்தம் ஜி ஏற்படுத்தினார் என்று கூறினார்.
சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட மொரீஷியஸ் நாட்டு துணை குடியரசுத் தலைவர் பரமசிவம் பிள்ளை வையாபுரி பேசுகையில், “மொரீஸியஸ் நாட்டில் வாரம் தோறும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமையன்று சரஸ்வதி பூஜை நடத்தப்படுகிறது. அப்போது விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, சிவன் பாடல்கள் பாடப்படுகின்றன. மொரீஷியல் நாட்டில் தமிழ் பண்பாடுக் கல்வியை வளர்க்க பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. கும்பகோணத்தில் பிறந்த கணிதமேதை ராமானுஜம் அவர்கள் பெயரில் போட்டிகள் நடத்தப்படும். மகாசிவராத்திரி, பொங்கல், தீபாவளி போன்ற அனைத்துப் பண்டிகைகளும் கொண்டாடப்படுகின்றன. திருப்புகழ், தேவாரம் திருவாசகம், பன்னிரு திருமுறைகளும் கோயில்களில் பாடப்படுகின்றன. நான் சிலப்பதிகாரத்தில் கோவலனாக நடித்திருக்கிறேன். இயற்கையைப் பாதுகாப்பது போல் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பது மிக அவசியமானது.” என்று தெரிவித்தார்.
தமிழ் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. அதன்பின் நவீன விஞ்ஞானமும், வேதமும் என்ற தலைப்பில் ராஜ ராஜ தாஷா இஸ்கான அவர்கள் உரையாற்றினார்.
தமிழ் முற்றம் அமைப்பாளர் பொன்கி. பெருமாள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். தாம்பரம் தேசிய மேல்நிலைப் பள்லியின் முதுகலை தமிழாசிரியர் வெ.நடராஜன் நன்றியுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தமிழ் முற்றம் அமைப்பினைச் சேர்ந்த பேச்சாளர்களில் நெல்லை சுப்பைய்யா, திருமதி நிர்மலாரவி ஆகியோருக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணஜெயந்தி விழாக்கமிட்டி நிர்வாகிகள், துளசிராம், சுப்ரமணியம். புலவர் அய்யாபிள்ளை, ஓராசிரியர் பள்ளிகளின் திட்ட அமைப்பாளர் ஜனார்த்தனம், குறட்செல்வர் திருமதி. ஆதிலிங்கம்பிச்சை ,விசுவஹிந்து பரிஷத் அலுவலகப் பொருப்பாளர்கள், ராஜேஸ்வரன், ஜி. சந்திரசேகரன், அலுவலகமேலாளர் கணபதி ராமசுப்பு ஜெய்கோபால் கரோடியா ஹிந்து வித்யாலயா, ஜி,கே. ஷெட்டி ஹிந்து வித்யாலயா, தாம்பரம் வித்யாலயா பள்ளிகளைச் சேர்ந்த அனைத்து தலைமை ஆசிரியர்கள். ஆசிரியர்கள், அலுவலக பொறுப்பாளர்கள், மாணவச் செல்வங்கள். கிராமக்கோவில் பூஜாரிகள் பேரவை மாநில அமைப்பாளர் .சோமசுந்தரம், விஸ்வஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர், மனோஜ் குமார், சேரகுளம் மாரியப்பன், நாகர்கோவில் எம்.எஸ்.மணி, சென்னை மாநகர அமைப்பாளர் கே.எல்.சத்தியமூர்த்தி, திரு.பாவேந்தன், ஓசூர் பிரபு அனைவரும் கலந்துகொண்டனர்.