Latest News :

தன்வந்திரி பீடத்தில் பிரச்சனைகள் தீர்க்கும் பிரதோஷ ஹோமம்!

c7a0fb1fdafe2d4bb627fffb02328509.jpg

பிரச்சனையான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் சிறப்பு. ஒருவரது ஜாதகத்தில் பலவகையான தோஷங்கள் இருக்கும் என்பது நிதர்சனம். அத்தகைய தோஷங்கள் நீங்க பிரதோஷ தினத்தில் தன்வந்திரி பீடத்தில் நந்தி பீடத்தில் அமர்ந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரரை வழிபடுவதன் மூலம் தோஷங்கள் நீங்கி நற்பயன் பெறலாம். 

 

பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் வழிபடுவதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தகைய சிறப்புவாய்ந்த நாளில், பிரதோஷ தினத்தில் பிரதோஷ நேரத்தில் இதயம் கனிந்து ஈசன் நமக்கு அதிகமான வரம் அருளும் ஈஸ்வரனை உடல் நலம் மன நலம் வேண்டி இயற்கை வளத்திற்காக நாமும் பிரார்த்தனை செய்வோம் பிரதோஷ காலத்தில் ஈசனை வழிபடுவதன் மூலம் அனைத்து தரப்பு மனிதர்களும் பலன் பெற முடியும். 

 

தன்வந்திரி பீடத்தில் அறிவு வளரவும், நினைவாற்றல் பெருகவும், தோஷங்கள் நீங்கி நன்மை பெறவும், ஆரோக்யம் வேண்டியும் பூர்வ ஜென்ம வினைகள் அகலவும், பிராமண சாபம் நீங்கவும், பெண் சாபம் மறையவும் மேலும் சிறப்பான பலன்கள் பெற வருகிற 14.03.2018 மற்றும் 29.03.2018 ஆகிய நாட்களில் பிரதோஷ ஹோமமும்,  பிரதோஷ பூஜையும், சிறப்பு அபிஷேகமும் மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் பசும்பால் கொண்டு மரகதேஸ்வரருக்கு அபிஷேகமும், வில்வ இலை, சங்குப்பூ கொண்டு சிறப்பு சிவநாம அர்ச்சனையும் நடைபெற உள்ளது. 

 

மேலும் தொடர்புக்கு :

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,

 

கீழ்புதுபேட்டை, அனந்தலை மதுரா,

 

வாலாஜாபேட்டை-632513

 

தொலைபேசி : 04172-230033 / 09443330203

 

www.danvantritemple.org   | www.danvantripeedam.blogspot.in

 

Email : danvantripeedam@gmail.com

Recent Gallery