தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையார்கள் சங்கத்தின் 16ம் ஆண்டு விழாசென்னை நந்தனம் YMCA வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத்தின் தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் தலைமைதாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
இந்த ஆண்டு விழாவின் மைய நிகழ்வாக 100 அரங்குகள் கொண்ட பிரமாண்டமான கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்களது வாகனங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. மேலும் மண் அள்ளும் இயந்திரங்களின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களும் கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சியை காலை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் குலசேகரன் திறந்து வைத்தார்.
வரலாற்றில் தமிழகத்தில் முதன் முறையாக மண் அள்ளும் பல்வேறு விதமான உலகத்தரத்திலான வாகனங்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. கண்காட்சியை ஆண்டு விழாவிற்கு வந்த நூற்றுகணக்கனோர் பார்வையிட்டர். மாலையில், விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் அவர்கள் கண்காட்சி அரங்குகளை ஒவ்வொன்றாக பார்வையிட்டார். அவருடன் சங்கத்தின் தலைவர் கத்திபார ஜெனார்த்தனன் மற்றும் சங்க பிரநிதிகளும் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டனர்.
ஆண்டு விழா மற்றும் கண்காட்சி குறித்தும் சங்கத் தலைவர் கத்திபாரா ஜெனார்த்தனன் கூறுகையில், “நாங்கள் ஆண்டு தோறும் சங்கத்தின் விழாவை நடத்தி வருகிறோம். இந்தாண்டு 16-வது ஆண்டு விழாவை நடத்துகிறோம். கடந்த 11- ஆண்டுகள் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று சிறப்பித்துள்ளார்.
இந்த ஆண்டு நடக்கும் இந்த நிகழ்சியையொட்டி பிரமாண்டமான கண்காட்சிநடத்தியது மிகவும் சிறப்பானது. கண்காட்சியானது அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்தது.
எங்கள் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கோரிக்கைகள் வைத்து வருகிறோம்.அதேபோன்று இந்தாண்டு கோரிக்கை வைக்கிறோம்.
• தொடரும் டீசல் விலை உயர்வை கண்டிக்கிறோம். டீசல் விலை உயர்வைதிரும்ப பெறவேண்டும்.
• ஒரு மணல்குவாரியில் இருந்து மண் எடுத்து செல்ல, அதே பகுதிவானங்களையும், இந்திரங்களையும் பயண்படுத்த வேண்டும்.
• குவாரிகளி்ல்சவூடுமண்அள்ளுவதில்நடக்கும்முறைகேடுகளைதடுத்துநிறுத்தவேண்டும்.
• ஏரி மண் குவாரிகளில் மண் எடுத்து செல்ல வாங்கப்படும் பணத்தை ரொக்கமாக பெறமால் வரவோலை’ யாக பெற வேண்டும்.
இந்த கோரிக்கைகளை முதல்வர் கனிவோடு பரிசிலினை செய்து நடவடடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், எங்கள் சங்கத்தின் ஆண்டுதோறும் ஏழை-ஏளியவர்களுக்கு,பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கி வருகிறோம்.மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள் நடத்தி வருகிறோம். இவைகள்மூலமாக ஏராளமனோர் பயன்பெற்றுள்ளனர்.” என்று தெரிவித்துள்ளனர்.