Latest News :

விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவின் 125 வது ஆண்டை கொண்டாடும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

ce25f8f975b65e7f88b0adef3f376ca9.jpg

கடந்த 1893 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் சுவாமி விவேகாந்தர் சொற்பொழிவு ஆற்றி 125 வருடங்கள் நிறைவுபெறுவதை முன்னிட்டு, அதனை கொண்டாடும் விதத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளை அறிவித்துள்ளது.

 

சுமாமி விவேகாந்தர் 1893 ஆம் ஆண்டு,  செப்டமர் 11 ஆம் தேதி சிகாகோ நகரில் ஆற்றிய உரை சரித்திரப்புகழ் வாய்ந்தது.

 

சுவாமி விவேகாந்தர், உலக மக்களை ‘சகோதர சகோதரிகளே’ என்று அழைத்து இந்திய நாட்டின் பாரம்பரியப் பொருமையை முழங்கினார். அந்த உரை நிகழ்த்தி 125 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அவை இன்றைய உலகிற்கு ஏற்புடையதாகவே உள்ளது.

 

உலகம் முழுவதும் நிலவி வரும் சாதி, சமய, இன மொழி பிரிவுகளால் மக்களிடையே அமைதி குலைந்து ஒரு நிலையற்றத் தனமை தற்போது காணப்படுகிறது.

 

இந்த நிலையில், உண்மையான அனைத்து மத நல்லிணக்கத்தையும் சமூதயப் பொறுப்புணர்வையும் மலரச் செய்ய வேண்டிய முக்கிய கடமையைக் கருத்தில் கொண்டு, இதற்கு சுவாமி விவேகானந்தரின் செய்திகளை மக்களிடையே, குறிப்பாக, இளைஞர்களிடையே கொண்டு செய்ய வேண்டிய அவசியத்தை உணர்ந்து ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், தமிழ்நாடு முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள, பள்ளி மற்றும் கல்லூரிகளில் பலவிதப் போட்டிகளை நடத்தி வருகிறது.

 

சுவாமிஜி ஆற்றிய உரைகளின் அடிப்படையில் ஒன்பது தலைப்புகளில் ஒப்பித்தல், பேச்சு, கட்டுரை கவித மற்றும் ஒவியப் போட்டிகள் நடந்து வருகின்றன.

 

பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுகளுக்கு ஒப்பித்தல் மற்றும் பேச்சுப்போட்டி, 10 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி, கட்டுரை, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் ஜூன் மாதம் முதல் தொடங்கப்பட்டுள்ளன.

 

பொதுமக்களும் கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகியவற்றில் பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 

இப்போட்டியை நடைமுறைப்படுத்த, மாவட்டம் தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டு செயல்படுத்தப் படுகிறது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களின் கல்வி நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு இப்போட்டிக்கான கையேடுகளை வழங்கியுள்ளனர். இதுவரை தமிழ்நாடு முழுவதும் 12.5 லட்சம் கையேடுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

 

போட்டி முதலில் பள்ளி, கல்லூரி அளவிலும் பின்னர் மாவட்ட அளவிலும் நடத்தபப்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் மாநிலப்போட்டியில் பங்கு பெற்று இறுதியாக மாநிலப் பரிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இப்போட்டிக்கு மாநில அளவில் ஒவ்வொரு போட்டிக்கும் 20 பரிசுகள் வீதம் ரூ.5 லட்சம் பெருமான 200 பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

 

இந்நிகழின் நிறைவு விழா வரும் செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று கோயம்புத்தூரில் பெரிய அளவில் நடைபெற உள்ளது.

 

இவ்விழாவில் 4000 மாணவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தி நல்வழிகாட்ட, பிரதமர் நரேந்திர மோடி அவர்களை காணொளி காட்சி மூலம் சிறப்புரை ஆற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்லது. இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இருக்கிறார்கள்.

Recent Gallery