தமிழகத்தில் புட்சல் என்ற கால்பந்து விளையாட்டு வேகமாக வளர்ந்து வருகிறது. சிறிய அளவிலான உள் மைதானத்தில், ஒரு அணியில் 5 பேர் இடம் வகிக்கும் இந்த புட்சல் கால்பந்து விளையாடுவதன் மூலம் உடலும், மனமும் சுறுசுறுப்பு அடைவதால், இளைஞர்கள் இதன் மீது பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், சென்னையின் பல பகுதிகளில் புட்சல் கால்பந்து கோர்ட்கள் திறக்கபப்ட்டு வருகிறது.
அந்த வகையில், ஐடி ஊழியர்கள் நிறைந்த சென்னை ஓ.எம்.ஆர் சாலை, சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ள ஏ.ஆர்.டி காம்பிளக்சில் செயல்பட்டு வரும் 'ஓ.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் அரினாவில்' புதிய புட்சல் கால்பந்தாட்ட கோர்ட் திறக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இங்கு பேட்மிண்டன் கோர்ட் செயல்பட்டு வரும் நிலையில், இந்த புதிய புட்சல் கோர்ட் திறப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஓ.எம்.ஆர் பகுதியில் இந்த புட்சல் கோர்ட் இருப்பதால் ஐடி ஊழியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருந்தாலும், இதில் அனைத்து தரப்பினரும் பயிற்சி பெறலாம் என்று புட்சல் கோர்ட் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த கோர்ட்டில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான கால்பந்தாட்ட வீரர்கள் பயிற்சியாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் இந்த புதிய புட்சல் கோர்ட்டின் திறப்பு விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, ஏழை சிறுவர்களுக்கான கால்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, அவர்களுக்கு பரிசுகளும் பதங்கங்களும் வழங்கப்பட்டது.
இப்போட்டியில் லைப் ஸ்போர்ட்ஸ் அகடாமியை சேர்ந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 16 அணிகள் பங்கேற்றன. இதில் எல்.எஸ்.ஏ அயனாவரம் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். எல்.எஸ்.ஏ செவ்வாபேட்டை அணி இரண்டாம் இடத்தை பிடித்தது. எல்.எஸ்.ஏ காஞ்சிபுரம் அணி மூன்றாம் இடத்தை பிடித்தது.
மேலும், இந்தியாவின் நம்பர் ஒன் கால்பந்தாட்ட ப்ரி ஸ்டைலர் தமிழ் முரளிதரின் ஸ்பெஷல் கால்பந்து ப்ரி ஸ்டைல் நிகழ்வும் இதில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் லைப் ஸ்போர்ட்ஸ் அகடாமியின் தலைமை பயிற்சியாளர் ஜோசப் நிர்மல் ராஜ், ஓ.எம்.ஆர் பேட்மிண்டன் அகடாமியின் முதன்மை பயிற்சியாளர் மொஹமத் அர்ஸத், விளையாட்டு ஆர்வளர் ஷேக் உஸ்மான், தஸ்வீண், ரிஃபை, மொய்தின் மற்றும் ஓ.எம்.ஆர் ஸ்போர்ட்ஸ் அரேனாவின் நிர்வாகி எஸ்.எம்.இம்ரான் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.