மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான அமைதி பேரணியை நடத்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் இருந்து கருணாநிதி நினைவிடம் வரை செல்லும் இந்த அமைதி பேரணியில் மு.க.அழகிரி தலைமையில் லட்சக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அமைதிப் பேரணி குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று மதுரையில் தொடங்கியது. நேற்றும், இன்றும் என இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தை சேர்ந்த திமுக பொருப்பாளர்கள் கலந்துக்கொண்டார்கள்.
வார்டு வாரியாக நிர்வாகிகளை சந்தித்த மு.க.அழகிரி, பேரணியை அமைதியான முறையில் பிரம்மாண்டாமன முறையில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது 16 வது வார்டு அஞ்சா நெஞ்சன் பாசறையின் பொருப்பாளரும், முன்னாள் மதுரை மேயர் பி.எம்.மன்னனின் போர் வாள் என்று அழைக்கப்படும் கால் டாக்ஸி என்.மோகன், பல்வேறு யோசனைகளை மு.க.அழகிரியிடம் தெரிவித்தார். இவரைப் போல வார்டு பொருப்பாளர்கள் பலர் மு.க.அழகிரியிடம் நேரடியாக பேரணி குறித்து பல்வேறு யோசனைகளை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பின் போது முன்னாள் மதுரை மேயர் பி.எம்.மன்னன் மு.க.அழகிரியுடன் இருந்தார்.