Latest News :

தமிழ்நாட்டில் முதன் முறையாக அதிநவீன ட்ரிஃபாய்ல் பல் இம்ப்ளாண்ட் சிகிச்சை அறிமுகம்

404f30851eb80951f467c9c8d06e9f20.jpg

பல்மருத்துவப்புரட்சியாககருதப்படும், ரிஃபாய்ல் ல் இம்ப்ளாண்ட் தொழில்நுட்ப சிகிச்சையை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்துவதில் ராஜன் டெண்டல் மாலோகிளினிக் பெருமைப்படுகிறது. ஒரே நாளில் கீழ்த்தாடையில் செயற்கை பற்கள் பொருத்தப்படுவது இந்த சிகிச்சையின் சிறப்பு ஆகும்.

 

கீழ்த்தாடையில் 24 மணி நேரத்தில் நிரந்தர செயற்கை பற்கள் பொருத்தும் நவீன ட்ரிஃபாய்ல் இம்ப்ளாண்ட் சிகிச்சை முறை அமெரிக்காவில் ஒருவருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்வீடன் நாட்டில் 65 ஆண்டு பாரம்பரியமுள்ள நோபல் பயோகேர் நிறுவனத்துடன் இணைந்து அமெரிக்காவின் புகழ் பெற்ற பல் இம்ப்ளாண்ட் மருத்துவரான பேராசிரியர் டாக்டர் கென்ஜ் ஹிகுசி இந்த சிகிச்சை முறையை வடிவமைத்துள்ளார். 

 

இந்த நவீனட்ரி ஃபாய்ல் பல் இம்ப்ளாண்ட் தொழில் நுட்பத்தில் கீழ்க்கண்ட சிறப்பு அம்சங்கள் அடங்கியுள்ளன.

 

• விரைவு :தயாராகஉள்ளடைட்டானியம்கட்டமைப்புடன்மூன்றுடெண்டல்இம்ப்ளாண்ட்மூலம்கீழ்த்தாடையில் 24 மணிநேரத்திற்குள்நிரந்தரசெயற்கைபற்கள்வழங்கமுடியும்.

 

•குறைவு : நடைமுறையில் உள்ள சில சிகிச்சைகள் மற்றும் செயற்கை பற்களின் தரத்தில் எந்த சமரசமுமின்றி, ட்ரிஃபாய்ல் சிகிச்சைக்கு 30% கட்டணம் குறைவாகவே ஆகிறது.

 

தமிழகத்தில் முதன் முறையாக ராஜன் பல் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 11, 2018 அன்று ட்ரிஃபாய்ல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாக உலக அளவில் புகழ் பெற்ற சிகிச்சை முறைகளை இந்தியாவுக்குக் கொண்டு வருவது ராஜன் பல் மருத்துவமனைதான். விபத்தில் பற்களை இழந்த, திருமணமாகாத 28 வயது இளம் பெண்ணுக்கு ட்ரிஃபாய்ல் சிகிச்சை மூலம் ராஜன் பல் மருத்துவமனை தீர்வு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

 

பொதுவாக மற்ற இம்ப்ளாண்ட் சிகிச்சையில், செயற்கை பற்கள் பெறுவதற்கு மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில், ட்ரிஃபாய்ல் பல் இம்ப்ளாண்ட் சிகிச்சைக்குத் தேவையான நிரந்தர செயற்கை பற்கள் 24 மணி நேரத்தில்அதாவது ஒரே நாளில் கிடைப்பதும் வரப்பிரசாதம் ஆகும்.

Recent Gallery