Latest News :

நுங்கம்பாக்கத்தில் ஆம்பூர் பிரியாணி! - வரிசைக்கட்டி நிற்கும் வாடிக்கையாளர்கள்

fe1e080f74b2c4be7d645333233087ca.jpg

சுமார் 25 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க, ஆம்பூரின் புகழ் பெற்ற பிரியாணி உணவகமான அல்சபி ஆம்பூர் பிரியாணி, கடந்த மாதம் சென்னை வளசரவாக்கத்தில் தொடங்கப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அதன் 2 வது கிளை சென்னை நுங்கம்பாக்கத்தில் திறக்கப்பட்டுள்ளது.

 

சுவை மற்றும் தரம் இரண்டுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகங்களின் 20 கிளைகள் சென்னையில் திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் இதன் முதல் கிளை சென்னை வளசரவாக்கம் திறக்கப்பட்டு வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து, உடனடியாக இரண்டாவது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்ட அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல், தங்களது இரண்டாவது கிளையை நுங்கம்பாக்கத்தில் உள்ள, உத்தமர் காந்தி சாலையில், காவேரி காம்பிளக்ஸ் பக்கத்தில் திறந்துள்ளார்.

 

நேற்று (செப்.28) நடைபெற்ற திறப்பு விழாவை முன்னிட்டு இரண்டு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்ற சலுகை வழங்கப்பட்டது. மேலும் 12 மணிக்கு பிரியாணி விற்பனை தொடங்கியதுமே சுமார் 1 மணி நேரத்தில் பிரியாணி முழுவதும் தீர்ந்ததோடு, மேலும் பல வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வந்தவண்ணம் இருந்ததோடு, பிரியாணி வாங்குவதற்காக பலர் வரிசையில் நிற்க, அப்பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் வரிசையால், அங்கு சிறிது பரபரப்பும் ஏற்பட்டது. 

 

நுங்கம்பாக்கத்தை தொடர்ந்து சென்னை தியாகராயா நகரில் 3 வது கிளை திறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் உரிமையாளர் கமல், “நாங்கள் திறக்கும் அனைத்து கிளைகளிலும் பிரியாணி ஒரே சுவையுடன் தான் இருக்கும். அதற்காக நாங்கள் அதிகமாக மெனக்கெடுகிறோம். எங்களது முதல் கிளைக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த வரவேற்பினால் உடனடியாக இந்த இரண்டாவது கிளையை தொடங்கியதோடு, மூன்றாவது கிளையை இன்னும் சில நாட்களில் தியாகராயா நகரில் திறக்க உள்ளோம். எத்தனை கிளைகள் திறந்தாலும், அத்தனையிலும் எங்களது பிரியாணி ஒரே சுவையுடனும், தரத்துடனும் இருக்கும். அதேபோல் பிராஞ்சீஸ் முறையில் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகத்தின் கிளைகளை திறக்க விரும்புகிறவர்களுக்கு, எந்தவித முன் தொகையும் பெறாமல் பிரியாணி உணவகம் திறக்க உதவுகிறோம். தற்போது சென்னையில் பல பகுதிகளில் அல்சலி ஆம்பூர் பிரியாணி உணவக கிளைகள் திறப்பதற்காக பலர் தொடர்பு கொண்டுள்ளதால் அதற்கான இடம் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் அல்சபி ஆம்பூர் பிரியாணி சென்னையின் அடையாளங்களில் மாறும் என்பது உறுதி.” என்றார்.

 

Alsafi Ambur Biryani

 

சிக்கன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.90 ஆகவும், மட்டன் பிரியாணி ஒரு பிளேட் ரூ.150 ஆகவும் விற்பனை செய்யப்படுவதோடு, 5 முதல் 6 நபர்கள் உண்ணக்கூடிய பக்கெட் சிக்கன் பிரியாணி முட்டையுடன் ரூ.900 ஆகவும், 10 முதல் 12 நபர்கள் உண்ணக்கூடிய விருந்து பக்கெட் பிரியாணி, இனிப்புடன் சேர்த்து ரூ.1400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 5 முதல் 6 நபர்கள் உண்ணக்கூடிய மட்டன் பக்கெட் பிரியானி ரூ.1100 ஆகவும், 10 முதல் 12 பேர் உண்ணக்கூடிய விருந்து பக்கெட் மட்டன் பிரியாணி ரூ.1800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

 

இலவச டோர் டெலிவரி வசதியை பெற 8260123456 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், மேலும் www.alsafibiryani.com என்ற இணையத்தளம் மூலமாகவும் ஆர்டர் செய்யலாம். 

 

வீட்டு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான கேட்டரிங் சேவையையும் அல்சபி ஆம்பூர் பிரியாணி உணவகம் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

Recent Gallery