Latest News :

தமிழகத்தில் புத்துணர்ச்சி பெறும் கால்பந்தாட்டம்! - புதிதாக 10 கால்பந்தாட்ட அரங்குகள் உதயம்

94c22d59cf6e9b9e559757b374fef938.jpg

ஹாட்புட் எஸ்யூஎப்சி, ஒரு முன்னணி விளையாட்டு அடிப்படை கட்டமைப்பு உருவாக்கி பயிற்சி அளித்து வரும் நிறுவனம். இது, சென்னையில் முதன்மையான விளையாட்டு வசதிகளை அளித்து வரும் டிக்கி டக்காவுடன் இணைந்து தமிழ்நாட்டில் வரும் 2019ம் ஆண்டுக்குள் 10 கால்பந்து விளையாட்டு அரங்குகளை நிறுவ திட்டமிட்டுள்ளது. முதலாவது மையத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வேல்ஸ் சர்வதேச பள்ளியில் துவக்குகிறது. 

 

அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதோடு, போட்டிகளில் உள்ள கலச்சாரம் மற்றும் மேலாண்மை போன்றவைகளையும் கற்று தரப்படுகிறது. வேல்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் வளாகத்தில் துவக்க விழாவின் போது ஹாட்புட் ஸ்போர்ட்ஸ் இயக்குனர் பவித் சிங் கூறுகையில், “தமிழ்நாட்டில் விளையாட்டுக்கான தரமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் திட்டமிட்டபோது, டிக்கி டக்கா தான் சரியான பங்குதாரர் என்பதை கண்டறிந்தோம். தமிழ்நாட்டில் இந்த அடிப்படை கட்டமைப்பு வசதியில், விளையாட்டு மேம்பாட்டுக்கான சூழல், கல்வி நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் பல குழு அமைத்தல் போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.” என்றார்.

 

சென்னையில் டிக்கி டக்கா ஏற்கனவே வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இணைந்து செயல்படுவதால், மேலும் இது வளர்ச்சி பெறும். டிக்கி டக்கா இயக்குனர் பிரகலாத் மெய்யப்பன் கூறுகையில், “ஏற்கனவே நாங்கள் அமைத்துள்ள வசதிகளுக்கு சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ஹாட்புட் எஸ்யுஎப்சி யுடன் இணைந்து, விளையாட்டுக்கு மாபெரும் சேவையாற்ற முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்போது நாங்கள் பல்வேறு விளையாட்டு துறைகளில் பயிற்சி அளிக்க திட்டமிட்டு வருகிறோம்,” என்றார்.

 

தமிழ்நாட்டில் தென்னக யுனைடெட் புட்பால் கிளப் (SUFC),நாட்டில் கால்பந்து திறனை மேம்படுத்த குழந்தைகளுக்கான சிறப்பு கால்பந்து கல்வி மையத்தை உருவாக்கியுள்ளது. 

 

football

 

தென்னக யுனைடெட் புட்பால் கிளப் தலைமை செயல் அதிகாரி பிரணவ் ட்ரெகன் கூறுகையில், “கால்பந்து போட்டிக்கு திறமையானவர்களை எங்கிருந்தாலும் கண்டறிந்து பயிற்சி தர வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாட்டிலும் இந்த பணியை மேற்கொள்ளப் போகிறோம். எங்களது கால்பந்து நிபுணர்கள் இங்கு பணியாற்றுவர். ஒரு நல்ல கால்பந்து வீரரை உருவாக்க நாங்கள் வழிவகுப்போம்.” என்றார்.

 

தமிழ்நாட்டில் பல இடங்களில் விளையாட்டுக்கான கட்டமைப்பை உருவாக்க டிக்கி டக்கா மற்றும் ஹாட்புட் எஸ்யுஎப்சி  இரண்டும் வால்ஸ் சர்வதேச பள்ளியில் இணைந்து, மாதிரி அடிப்படை கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி விளையாட்டை மேம்படுத்தவும் இளைஞர்கள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க ஊக்கமளிக்கவும் பேருதவியாக இருக்கும்.

Recent Gallery