வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று 13.02.2019, காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை ராகு – கேது பெயர்ச்சி யாகமும், ஏகரூப ராகு-கேதுவிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெற்றது. ராகு கேது எந்த ராசியில் இருக்கிறார்களோ, எந்தக் கோள்களினால் பார்க்கப்படுகின்றரோ, எந்தக் கோள்களின் சேர்க்கை பெற்றுள்ளனரோ, அதற்கு தக்கவாறு பலன்களை முழுமையாகத் தருவார்கள். குறைகளையும் நிறைகளையும் வஞ்சகம் இல்லாமல் அள்ளித் தரும் மா வள்ளல் ராகு பகவான். ஞானகாரகன். ஞானம் அருள்பவர். புகழ், பதவி, அதிகாரம் போன்றவற்றைத் தருபவர்.
குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சியைப் போலவே ராகு - கேது பெயர்ச்சியும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக இருக்கிறது. ராகுவும் கேதுவும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குச் செல்லும் காலகட்டத்தைதான் நாம் ராகு - கேது பெயர்ச்சி என்கிறோம். வாக்கிய பஞ்சாங்கப்படி நேற்று 13.02.2019 புதன்கிழமை அன்று கடகம் ராசியிலிருந்து இருந்து மிதுனம் ராசிக்கு ராகு மாறுகிறார். கேதுவானவர் மகரம் ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்சி செய்கிறார். இந்த வகையில் பெயர்ச்சியை முன்னிட்டு தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ராகுகேது யாகமும் சிறப்பு அபிஷேகமும், ‘ராகு - கேது பெயர்ச்சி’ விமரிசையாக நேற்று 13.02.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்றது.
இந்த யாகத்தில் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் போன்ற ராசிக்காரர்கள் மற்றும் ராகுதிசை, ராகுபுத்தி, கேதுதிசை, கேதுபுத்தி, நடப்பவர்களும் பரிகாரங்கள் செய்தனர். இந்த ஹோமத்தில் திருமணத் தடை, உத்தியோகம் இன்மை, அயல்நாட்டுப் பயணம் தடைபடுதல், குழந்தைபேரின்மை, தம்பதிக்குள் ஒற்றுமை மிகுதல், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெறுதல் போன்ற பல்வேறு பிரார்த்தனைகள் அகல கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து மஹா அன்னதானம் நடைபெற்றது. இந்த யாகத்தில் உத்திரமேரூர் அருகில் உள்ள சதாசிவ பிரம்மேந்திர ஆசிரமத்தின் மாதாஜி அன்னபூரணி அம்மா கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மேலும் வருகிற 09.03.2019 சனிக்கிழமை திருக்கணித பஞ்சாங்க பிரகாரம் ராகு-கேது பெயர்ச்சி யாகம் காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தனர் தெரிவித்தனர்.