காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களில் தமிழக வீரர்களும் இரண்டு பேர் வீரமரணம் அடைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் பலர் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பரமணியன், சிவசந்திரன் என்ற 2 வீரர்களும் ஆவர்.
இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சதிகார கும்பளின் சதி செயல்கள் அதிகம் ஆகிகொண்டிருகின்றன. வீரமரணம் அடைந்த அனைத்து உயிர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையவும், அவர்களை பிரிந்து தவிக்கும் மக்களின் மனம் அமைதி பெறவும், உயிர் பிரிந்த ஆத்மாக்கள் முக்தி பெறவும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் இன்று 16.02.2019 சனிக்கிழமை “யக்ஞஸ்ரீ” முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி மோக்ஷதீபம் ஏற்றப்பட்டு, கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் சத்ருக்களின் தொல்லைகளில் இருந்து நாடு நலம் பெற சத்ரு சம்ஹார ஹோமம் செய்து முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.