Latest News :

தன்வந்திரி பீடத்தில் தடைகள் நீங்க தச பைரவர் யாகம்! - தேய்பிறை அஷ்டமியில் நடைபெற உள்ளது

07fb92ddaef6829d94a1c13a8948769a.jpg

இந்தியாவில் பலயிடங்களில் பைரவருக்கென்று பல்வேறு பெயர்களில் திருச்சன்னதிகள் உண்டு. குறிப்பாக சிலயிடங்களில் பைரவருக்கென்று தனி ஆலயமும் உள்ளது. கால பைரவர் என்றால் நமக்கு நினைவிற்கு வரும் கோவில் காசியில் அமைந்துள்ள தக்ஷிண கால பைரவர் கோவில் பைரவர் தான் அனைவரின் மனதிலும் முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக தச பைரவர் என்றால் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடம்தான் பக்தர்கள் அனைவரும் மனதிலும் மிகக்குருகிய காலத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் கூறலாம். அந்த அளவு ஸ்தாபகர் முரளிதர ஸ்வாமிகளின் கடுமையான முயர்ச்சிகளாலும், உழைப்பினாலும், ஸ்ரீ தன்வந்திரி பெருமாளின் பரிபூரண அருளை பெற்றதினாலும் இப்பீடத்தில் 75 சன்னதிகளுடன் தச பைரவர் சன்னதியை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தசபைரவர்களை தரிசிக்கவும், இங்கு நடைபெறும் யாகங்களில் பங்கேற்கவும் உள்ளூர் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வருகின்றனர். இப்பீடத்தில் சென்ற ஆண்டு 74 பைரவருக்காக 74 யாககுண்டங்கள் அமைத்து, 74 சிவாச்சார்யர்கள் அமர்ந்து நடைபெற்ற யாகத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் பங்கேற்று பயன் பெற்றனர் என்று அனைவரும் அறிந்ததே. மேலும் அவ்வப்பொழுது 64 பைரவர் யாகம், அஷ்ட பைரவர் யாகம், தச பைரவர் யாகம், என்ற வரிசையில் யாகங்கள் நடைபெற்று வருகின்றன. ஆதியும் அந்தமுமான இவரை பல்வேறு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

 

இந்த  64 பைரவர்களில் அஷ்ட பைரவர்கள் மிகவும் முக்கியத்துவம் பெருகின்றனர். இப்பீடத்தில் அஷ்டகாலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று 64 விதமான அபிஷேகங்களும், 64 விதமான யாகங்களும், அஷ்ட பைரவர் யாகங்களும் அவ்வப்பொழுது  மிக விமர்சையாகவும் விழாவாகவே  காலை சொர்ண கால பைரவருக்கும், மாலை அஷ்ட பைரவர்களுக்கும், மஹா காலபைரவருக்கும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகிற 26.02.2019 செவ்வாய்கிழமை மாலை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட கால பைரவருக்கு அஷ்டமி யாகம் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 1008 அர்ச்சனையும், சதுர் வேதபாராயணமும், உபசார பூஜைகளுடன் மஹா மங்கள ஆரத்தியும், தடைகள் நீங்க நடைபெற உள்ளது. 

 

12 ராசிகாரர்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க நடைபெறும் அஷ்ட காலபைரவர் யாகத்தில் கலந்துகொண்டு நினைத்த காரியங்கள் விரைவில் தடையில்லாமல் நிறைவேறவும், தொழில் ரீதியாக வெளிநாடு சென்று வாழும் பக்தர்களுக்கு ஏற்படும் தடைகள் நீங்கவும், வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி பெறவும், நவக்கிரகங்களால் ஏற்படும் சோதனைகள் அகலவும், பல்வேறு தடைகளுக்காக தச பைரவர்களுக்கு யாகம் நடைபெற உள்ளது. மேலும் பைரவர்களுக்கு 8 வெண் பூசணிக்காய் கொண்டு கூஷ்மாண்ட தீபம் ஏற்றி, செவ்வரளி மலர் மாலை, உளர் பழங்களை பூஜைக்கு அளித்து, பைரவரை 8 சுற்றுகள் சுற்றி வலம் வந்து வழிபடுவது மிகவும் சிறப்பாகும்.

 

இந்த யாகத்திற்கு  புஷ்பங்கள், பழங்கள், மூலிகை திரவியங்கள், பூஜை பொருட்கள், மளிகை பொருட்கள், அன்னதான பொருட்கள், பூர்ணாஹூதி வஸ்திரங்கள், சிவாச்சரியர் வஸ்திரங்கள், நெய், தேன் போன்ற பல்வேறு பொருட்கள் வழங்கி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இறைபணியில் ஈடுபட அன்புடன் அழைக்கின்றோம். இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

தொடர்புக்கு

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் 

 

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513. 

 

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203 

 

Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in 

 

Email: danvantripeedam@gmail.com

Recent Gallery