Latest News :

தன்வந்திரி பீடத்திற்கு வருகை தந்த தென்மண்டல பசுமை தீர்ப்பாய தலைவர்

777b83554d9892a2f8058fd72f6ac128.jpg

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்திற்கு 26.02.2019 செவ்வாய்கிழமை தென்மண்டல பசுமை தீர்ப்பாய தலைவர் நீதிபதி டாக்டர் பி.ஜோதிமணி அவர்கள் வருகை புரிந்து, பீடத்தில் வருகிற மார்ச் மாதம் 13 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 15 ஆம் ஆண்டு சம்வத்ஸராபிஷேகம், ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா, ஷோடச (16) திருக்கல்யாண மஹோத்ஸவம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக நடைபெறும் திருப்பணிகளை பார்வையிடார். 

 

அதனை தொடர்ந்து பீடத்தில் நடைபெற்ற விசேஷ ஹோமங்களில் பங்குபெற்று பின்பு ஸ்ரீ ஆரோக்ய லக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள் மற்றும் இதர 75 பரிவார மூர்த்திகளையும் தரிசித்து, யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று சென்றனர். 

 

Danvanthiri Peedam

 

சென்னை திரு. R. சுந்தர்ராஜன், ஈரோடு திரு. மாரிமுத்து, திருமதி. நிர்மலா முரளிதரன், ஊட்டி திரு. ராஜசேகரன் அவர்கள் உடன் இருந்தனர். 

Recent Gallery