Latest News :

தன்வந்திரி பீடத்தில் கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை! - மார்ச் 13ஆம் தேதி நடைபெறுகிறது

ca622ec57938b23bf5649ba0eed1e0db.jpg

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் 58வது ஜெயந்தி விழா மற்றும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தின் 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதா திருக்கல்யாணம், 108 சுமங்கலி பூஜை, சமஷ்டி உபநயனம் பொதுமக்கள் முன்னிலையில் ஸ்வாமிகளின் ஆக்ஞப்படி நடைபெறுகிறது.

 

கோமாதா திருக்கல்யாணம் :

 

பசுவை பூஜிப்பவன், போஷிப்பவன் எல்லாருமே சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு புண்ணிய லோகத்தை அடைவர் என்று பிரம்மதேவர் வரம் அருளினாராம். பசுக்களின் தேகமெல்லாம் தேவர்கள் நிறைந்திருக்கின்றனர். பகவானால் படைக்கப்பட்டுள்ள விலங்குகளில் பசுக்களும் அடங்கும்.

 

பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் பசுவின் தேகத்தில் சகல தேவர்களும் வாசம் செய்கின்றனர் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும். பால், தயிர், நெய், போன்றவற்றை ஆண்டு முழுவதும் தருகின்ற பசுவிற்கு மரியாதை செய்து பூஜித்து பொங்கல் வைத்து அன்னமிட வேண்டும்.

 

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் மழை குறைவால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. விவசாய பெருமக்கள் தங்களின் தினசரி செலவினத்திற்காக கால்நடை மற்றும் கறவை மாடுகளை வைத்து பால் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது போதிய மழையில்லாத காரணத்தால், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், கால்நடைகளுக்கு தேவையான வைக்கோலை, பல்வேறு ஊர்களிலிருந்து விவசாயிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

 

விவசாயிகள் விவசாயத்துடன், உப தொழிலாக கால்நடை வளர்ப்பை மேற்கொண்டு வருகின்றனர். போதிய மழையில்லாததால் விளைச்சல் இன்றி விளை நிலங்கள் காய்ந்துள்ளன. இதனால் கால்நடைகளுக்கு தேவையான வைக்கோல் கிடைக்காத நிலையில், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவற்றை மனதில்கொண்டு கோமாதாவை போற்றி வணங்கும் விதத்திலும், முப்பத்தி முக்கோடி தேவர்களின் ஆசி வேண்டியும், சகல விதமான தோஷங்கள் நீங்கவும், சகல விதமான ஜீவராசிகளின் நலன் வேண்டி வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை 12.00 மணி முதல் 2.00 மணி வரை கோமாதாவிற்கும் நந்தி பகவானுக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

 

108 சுமங்கலி பூஜை :

 

சுமங்கலிப் பூஜையின் சிறப்பம்சங்கள்

 

ஷோடச (16) திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு சம்பிரதாய பூஜையாக, பாரம்பர்யத்தை போற்றும் விதமாகவும், அனைத்து பக்தர்களுக்கும் மேற்கண்ட தெய்வங்களின் அனுக்கிரகம் வேண்டி வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை 108 சுமங்கலி பூஜை நடைபெற உள்ளது.

 

திருமணமாகி கணவனுடன் வாழும் பெண்களை சுமங்கலி என்று கூறுவார்கள். சுமங்கலி பூஜை மூதாதையரின் ஆசீர்வாதங்களைப் பெறவும், பித்ருக்களின் விருப்பங்கள் நிறைவேறவும், குழந்தை பாக்யம், கணவனின் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல ஆரோக்கியம் மற்றும் நிறைவான வாழ்வு வேண்டியும், தாய்க்கு நன்றி செலுத்தும் வைபவமாகவும் கூட்டுப் பிரார்த்தனையாகவும் கருதப்படுகின்றது. இதற்காக சிறப்பு ஹோமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பூஜையில் 108 பெண்கள் கலந்து கொள்ள உள்ளார்கள். அவர்களுக்கு ஸ்வாமிகள் ஆசிகளுடன் பாதபூஜை செய்து, புது வஸ்திரத்துடன் மங்கள பொருட்கள் அளித்து அன்னதானம் வழங்கப்பட உள்ளது.  

 

சமஷ்டி உபநயனம் :

 

வேத மாதாவின் அருள் வேண்டியும், வேதங்களை போற்றி ஆராதிக்கும் விதத்திலும், அந்தணர்களின் வாழ்வு சிறக்கவும் வருகிற 13.03.2019 மாசி மாதம் 29ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை மாசி மணிபூணல் சமஷ்டி உபநயனம் நடைபெறுகிறது.

 

உபநயனம் சிறப்பு :

 

'உபநயனம்' என்றால் 'ஸமீபத்தில் அழைத்துப் போகிறது'. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.இதுவரை குழந்தையாக மனம் 'உப' என்றால் பிரம்மத்திற்கு அருகில் என்பது பொருள். ஆசாரங்கள், ஒழுக்கங்கள் இன்றியமையாதது. ஆகவே பூணூல் சமஸ்காரம் என்பது மனிதனை மனித வாழ்க்கையில் ஆன்மிக உயர்நிலை அடைவதற்காக ஏற்பட்டது. இரண்டாவது, உபநயனத்தில் பூணூல் போட்டுக்கொள்வது என்பது பிரதானமாக பேசப்படுகிறது. ஆனால் உபநயனத்தின் முக்கிய அம்சம் ஒரு பெரியோரின் மூலம், ஒரு குருவின் மூலம், அல்லது தகப்பனாரின் மூலம் வேதோக்தமான காயத்ரீ மந்திரத்தை ஏற்றுக்கொள்வதே முக்கிய நோக்கமாகும். அதற்கு அங்கமாகத்தான் சுத்தமாயும், பவித்ரமாயும் பூணூல் போட்டுக் கொள்வது. இதை வைத்துத்தான் உபநயனம், ப்ரம்மோபதேசம் என்று சொல்லுகிறோம். வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்: மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம். சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவந்தனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். ஸந்த்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும்.

 

மேற்கண்ட முபெரும் வைபவங்கள் வருகிற 13.03.2019 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

தொடர்புக்கு :

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

 

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

 

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

 

Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

 

Email: danvantripeedam@gmail.com

Recent Gallery