Latest News :

‘மேக் ஃபார் இந்தியா’ பெயரில் 12 மொழிகளில் கேலக்ஸி ஆப் ஸ்டோர் தொடங்கும் சாம்சங்!

d237bd7d93ac251271cf33693e898b27.jpg

தனது வலுவான பயனர் தளத்துடனான இணைப்பை வலுவூட்டும் விதமாக, சாம்சங் இந்தியா இன்று 12 இந்திய மொழிகளில் தங்களின் விருப்பமான மொபைல் பயன்பாடுகளை கண்டறிந்து அணுகுவதற்காக தனது பயனர்களுக்கு அதிகாரம் வழங்கும் விதமாக இன்டஸ் ஆப் பஜாருடன் கூட்டணி அமைத்துள்ளதை அறிவிக்கிறது. இந்த அறிவிப்பு சிறு நகரங்கள் முதல் பெருநகரங்கள் வரை இந்தியாவெங்கிலும் ஆப் டவுன்லோடுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதை தொழில்துறை கண்டுவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. 

 

“அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 சந்தைகள் எங்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் மொபைல் அப்ளிகேஷன்களின் பயன்பாட்டின் ஊடுருவல் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு குறித்து முக்கிய சந்தைகளில் நாங்கள் ஆய்வு நடத்தினோம் மற்றும் வட்டார மொழிப் பயன்பாடுகளில் வளர்ச்சித் தேவையை நிறைவு செய்வதற்காக இன்டஸ் ஆப் பஜாருடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணி எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பமான ஆப்களை கேலக்ஸ் ஆப் ஸ்டோரில் ஆங்கிலத்திற்கு கூடுதலாக 12 இந்திய மொழிகளில் அணுகலாம். இதனுடன், நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்கள் கேலக்ஸி ஆப் ஸ்டோரை இன்னும் அதிக பயனுள்ளதாக மற்றும் பயனருக்கு நட்பானதாக அறிவார்கள் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்றார் சஞ்சய் ரஜ்தான், மூத்த இயக்குநர், சேவைகள் மேலாண்மை, சாம்சங் இந்தியா. 

 

சாம்சங்கின் சமீபத்திய மேக் ஃபார் இந்தியா சலுகை கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களின் வட்டார மொழியில் கேலக்ஸி ஆப் ஸ்டோரில் முழுமையான அட்டவணையை பார்க்க முடியும். கேலக்ஸ் ஆப் ஸ்டோர் ஆங்கிலத்தோடு, மலையாளம், தெலுங்கு, தமிழ், ஒடியா, அசாமி, பஞ்சாபி, கன்னடம், குஜராத்தி, இந்தி, உருது, பெங்காலி, மற்றும் மராத்தி மொழிகளில் கிடைக்கப் பெறுகிறது. 

 

கேலக்ஸி ஆப்ஸ் ஸ்டோர் இப்போது பயனர்களுக்கு இலவச அப்ளிகேஷன்களை டவுன்லோடு செய்து கொள்வதற்காக எந்தவிதமான சைன் இன்னும் செய்யாமல், தடையோ தயக்கமோ இல்லாத அனுபவத்தினைத் தருகிறது. 

 

“தங்களின் உள்ளூர் மொழிகளில் தொடர்பு கொள்வதற்காக மொபைல் பயனாளர்களிடையே தேவை வளர்ந்து வருவதை நாங்கள் புரிந்து கொண்டுள்ளோம். புதிய கேலக்ஸி ஆப் ஸ்டோர் இந்த திசையில் ஒரு புதிய முயற்சியாகும். ஆப்களின் மீது கட்டாய சைன் இன் ஒரு கூடுதல் படி என்பதால் இலவச டவுன்லோடு ஆப்களில் நாங்கள் அதை முற்றிலும் அகற்றியுள்ளோம். சீரமைக்கப்பட்ட பயனர் அனுபவத்துடன் எண்ணிலடங்கா ஆப்ஸ்கள் கேலக்ஸ் ஆப்ஸ்டோரில் கிடைக்கப் பெறுகின்றன, கேலக்ஸி பயனர்கள் இந்த புதிய அனுபவத்தை நேசித்து அதனுடன் காதல் கொள்வார்கள் என்று நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.” என்று ரஜ்தான் மேலும் கூறினார். 

 

கேலக்ஸி ஆப்ஸ் ஸ்டோர் ஒரு உறுதியான தனிப்பட்ட பரிந்துரை பொறியை பயனர்கள் தங்களின் தேவைகளுக்கு சிற்நத வகையில் ஆப்களை டவுன்லோடு செய்வதற்கான தேர்வினை வழங்குகிறது. கேலக்ஸி ஆப், இந்திய அரசாங்கத்தின் “ஸ்டார்ட்அப் இந்தியா” திட்டத்திற்கு ஏற்ப, சாம்சங் ஸ்மார்ட் போன் பயனர்களுக்கான அனைத்து இந்திய புத்தாக்கங்களையும் முன்னிலைப்படுத்தும் விதமாக சிறப்பு பிரிவுகளை கேலக்ஸி ஆப் கொண்டிருக்கும்.

Recent Gallery