Latest News :

பனை ஓலை கறி சோறு, மூங்கில் பிரியாணி,...! - பட்டையை கிளப்பும் ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’

f5d2b1a62c94314588db56e033958b83.jpg

திண்டுக்கல் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பூட்டு தான், அதையும் தாண்டினால் பிரியாணி நினைவுக்கு வரும். ஆனால், தற்போது இந்த இரண்டையும் பின்னுக்கு தள்ளிவிட்டு, தற்போதைய திண்டுக்கல்லின் அடையாளமாக ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ உணவகம் மாறியிருக்கிறது. அதற்கு காரணம், இந்த உணவகத்தின் உணவுகளின் சுவை மட்டும் அல்ல, பாரம்பரியமும், தரமும், விலையும் தான்.

 

Karunaas Rathina Vilas

 

அசைவம் மற்றும் சைவம் என இரண்டிலும் பல வகையான உணவு வகைகளை பரிமாறும் இந்த ஓட்டலில், விழாக்காலம் மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் பல புதுவிதமான பாரம்பரியமான உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அசத்தி வருகிறார்கள். தற்போது கோடைக்காலத்திற்கு ஏற்ற பலவிதமான சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.

 

அந்த வகையில், கம்மங் கூழ் மற்றும் பழைய சோறு, வெற்றிலை பூண்டு சோறு, சின்ன வெங்காயம் பூண்டு சாதம், பனை ஓலை கறி சோறு, மூங்கில் பிரியாணி, சட்னி மீன், குழி தாழி வாழைப்பூ வருவல், பாண்டியநாட்டு கரி உள்ளிட்ட பல வகையான சுவைமிக்க உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஸான் உள்ளிட்ட அனைத்து விழாக்காலங்களிலும் அதற்கு ஏற்றவாறு பல தென்னிந்திய உணவு வகைகளை அறிமுகப்படுத்தியும் வருகிறார்கள்.

 

Karunaas Rathina Vilas

 

தமிழகத்தில் பிரபலமான மற்றும் பாரம்பரியம் மிக்க சமையல் கலைஞர்களின் நேரடி சிஷ்யர்கள் தான், ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ ஓட்டலில் சமையல் நிபுணர்களாக பணியாற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுவை, தரம், பாரம்பரியம் இவை மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் உணவுகளுக்கு விலை நிர்ணயம் செய்வதிலும் கவனமாக இருக்கிறார்கள். என்னதான், சுவை, தரம், பாரம்பரியம் அனைத்தும் உயர்வாக இருந்தாலும், நடுத்தர மக்களும் தமது உணவை உண்ண வேண்டும் என்பதற்காக நியாயமான விலையை மட்டுமே நிர்ணயம் செய்வதால், திண்டுக்கல் மட்டும் இன்றி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருப்பவர்களும் ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ் ஓட்டலுக்கு வந்து உணவு வகைகளை சுவைக்க தொடங்கிவிட்டார்கள்.

 

Karunaas Rathina Vilas

 

இறால் மூங்கில் பிரியாணி, ஆப்பம், சட்னி மீன், எண்ணெய் கறி வெஞ்சனம், இளநீர் பாயசம், இறால் வடை, கொத்துக்கரி கசமுசா, குழி தாழி வாழைப்பூ வருவல், நண்டு மிலகு வதக்கல், அசை சாப்பாடு, பாண்டியநாடு கரி குழம்பு, பன்னீர் பிரை, பிச்சி போட்ட கோழி கரி, உப்பு கரி பிரட்டல், உப்பு கரி சாதம் என்று நீளும் உணவு வகைகளின் பட்டியலை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.

 

Karunaas Rathina Vilas

 

மேலை நாட்டு உணவு வகைகளின் பெருக்கத்தால், உடலுக்கு ஆரோக்யம் தரும் நமது பாரம்பரிய உணவு வகைகளை மறந்துபோன மக்களை மீண்டும் நமது பாரம்பரிய உணவுகளை சாப்பிட வைக்கும் நோக்கத்தோடு, பல வகையான பாரம்பரிய உணவுகளை சுவையாக சமைத்து தரும் ‘கருணாஸ்-ன் ரத்தின விலாஸ்’ ஓட்டல் கிளைகள் சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் விரைவில் தொடங்க இருக்கிறது.

 

Karunaas Rathina Vilas

 

Karunaas Rathina Vilas

 

Karunaas Rathina Vilas

Recent Gallery