Latest News :

அக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்

4e238a6253cdf8c29523ddec2f4c26c2.jpg

வேலூர் மாவாட்டம்  வாலாஜாபேட்டை அனந்தலை மதுரா கீழ்புதுபேட்டையில் பல்லாயிர கணக்கான மக்கள் முன்னிலையில் தமிழக ஆளுனர் அவர்கள் வருகை புரிந்து சிறப்பித்து, ஆயிரம் தவில் நாதஸ்வர கலைஞர்களின் நாதசங்கம் நிகழ்ச்சியுடன் 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடைபெற்று இன்று மக்களால் அக்ஷயபுரியாகவும், சௌபாக்யபுரியாகவும், மஹோத்ஸவபுரியாகவும் மஹோத்ஸவ க்ஷேத்ரமாகவும், ஔஷதகிரியாகவும் அழைத்து மகிழும் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தின் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி “யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு” டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள், ஆசிகளுடன் உலக மக்களின் நலன் கருதி வருகிற 07.05.2019 செவ்வாய்க்கிழமை அக்ஷய திரிதியை முன்னிட்டு காலை 10.00 மணியளவில் ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹாயாகம், ஷோடச தானத்துடன் ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு ஷோடஷ திரவிய அபிஷேகம் நடைபெறுகிறது.

 

சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் வரும் திரிதியை, "அக்ஷய திருதியை" எனப்படுகிறது. 'அக்ஷயம்' என்றால் வளர்வது என்று பொருள். அக்ஷய திருதியை அன்று நாம் என்ன பொருள் வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு. அதனால் அக்ஷய திருதியை அள்ள, அள்ள குறையாமல் புண்ணிய செல்வத்தை அள்ளி தரும் சிறப்புமிக்க திருநாள் என்று போற்றப்படுகிறது.

 

வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அக்ஷய பாத்திரம் பெற்றதும், மணி மேகலை அக்ஷய பாத்திரம் பெற்றதும், பரசுராமர் அவதரித்த தினமும் இதே அக்ஷய திருதியை தினத்தில் தான் என்று புராணங்கள் எடுத் துரைக்கின்றன. அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டதும் இந்த நாளில் தான்.

 

தங்கம் மட்டுமின்றி உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் என்ன வாங்கினாலும் மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். மேலும் அன்று புதிதாக தொழில் தொடங்குவதும், பூமிபூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும். அக்ஷய திருதியை அன்று ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது.

 

தர்ப்பணம் செய்யலாம் இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமைநீங்கி வளமான அக்ஷய திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும்.

 

உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுப்பது மகாலட்சுமியின் திருவருளைப் பெற வழி வகுக்கும்.

 

உணவு தானம் வற்றாத கடலில் இருந்து பெறப்படுகிற, எப்போதும் வீட்டில் இருப்பு வைத்திருக்கக்கூடிய உப்பைத் தானம் செய்வது எல்லோராலும் சாத்தியப்படக்கூடியது அல்ல. காரணம் உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாகக் கொடுத்துவிட்டு, லஷ்மி பூஜை செய்ய வேண்டும்.

 

தயிர்சாதம் தானம் ஏழையாகப் பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். பாஞ்சாலி துகிலுரியப்படும் நேரத்தில், குறையாத புடவையைக் கொடுத்து அவள் மானம் காத்தது இதே நாளில் தான். இன்றைய தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும். ஏழைகளுக்கு தயிர்சாதம் தருவது, 11 தலைமுறைக்கு குறையில்லா அன்பை கிடைக்கச் செய்யும். வாழ்வு அமையும்.

 

லட்சுமி குபேரர் யாகம் இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளான அக்ஷய திருதியை நாளை முன்னிட்டு வருகிற 07.05.2019 செவ்வாய்கிழமை தன்வந்திரி பீடத்தில் ப்ரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ லக்ஷ்மி குபேரருக்கு 16 கலசங்கள் வைத்து தாமரை மணிகள், தாமரை புஷ்பங்கள், தேன், நெய் மற்றும் பலவிதமான விஷேச புஷ்பங்கள், திரவியங்கள் கொண்டு மாபெரும் ஸ்ரீ குபேர லஷ்மி யாகம் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஸ்ரீ லஷ்மி குபேரருக்கு 16 விதமான திரவியங்களை கொண்டு மஹா அபிஷேகமும் 1008 சொர்ண பைரவர் காசுகளை கொண்டு மகா அர்ச்சனையும் ஸ்ரீ குபேர யந்திர பூஜையும் நடைபெற உள்ளது. மேற்கண்ட வைபவங்களில் பங்கேற்று 16 விதமான செல்வங்களை பெற்று ஆயுள், ஆரோக்யம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற்று ஸ்ரீ குபேர லக்ஷ்மியின் அருளால் சிறப்புடன் வாழலாம் என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

 

வாருங்கள் அக்ஷய திருதியில் கீழ்கண்ட பொருட்கள் தானங்கள் செய்து சேருங்கள் புண்ணிய பலங்களை.

 

மாங்கல்ய சரடு தானம் :மாங்கல்ய சரடு தானம் செய்தால் காமக் குற்றங்கள் அகலும். தீர்க்க மாங்கல்ய பாக்யம் உண்டாகும்.

 

பொன் மாங்கல்யம் தானம் : பொன் மாங்கல்யம் தானம் செய்தால் மாங்கல்ய தோஷங்கள் நீங்கும். திருமண தடங்கல்கள் நீங்கும்.

 

குடை தானம் : குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும்.

 

எண்ணெய் தானம் : எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

 

பூ தானம் : பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும், சாந்தமாகவும் அமையும்.

 

அரிசி தானம் – பயம் நீங்கும், பித்ரு தோஷம் விலகும்.

 

வஸ்திரதானம் - ஆயுள் விருத்தி பெறும்.

 

தேன் தானம் - புத்திர பாக்கியம் பெறலாம்.

 

நெல்லிக்காய் தானம் – ஞானம், பக்தி, வைராக்யம் கிடைக்கும்.

 

விதை வித்துகள் தானம் - ஆயுள், சந்ததி விருத்தி, நல் விளச்சல் கூடும்.

 

தாம்பூல தானம் – சுகமான வாழ்வு பெறலாம்.

 

இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

 

தொடர்புக்கு :

 

ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

 

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513.

 

வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

 

Web: www.danvantritemple.org , www.danvantripeedam.blogspot.in

 

Email: danvantripeedam@gmail.com

Recent Gallery