Latest News :

தன்வந்திரி பீடத்தில் நடைபெற்ற குரு கிரக சாந்தி ஹோமம்

ef5dd46f2fc5eaec68b0471e69ff39fc.jpg

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளானைப்படி உலக மக்கள் நலன் கருதி இன்று 08.08.2019 வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை குரு கிரக சாந்தி ஹோமமும், பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் குருவருள் பெற நடைபெற்றது.

 

இந்த ஹோமத்தில் நெய், தேன், நவசமித்துக்கள், மஞ்சள் நிற வஸ்திரங்கள், மூக்கடலை, நவதானியங்கள், மஞ்சள் நிற புஷ்பங்கள், பழங்கள், விசேஷ நிவேதனங்கள், மூலிகைகள் சமர்பிக்கபட்டு மஹா பூர்ணாஹுதி நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்திக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி போன்ற பஞ்ச திரவிய அபிஷேகத்துடன் கலசாபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு இறை பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். 

Recent Gallery