Latest News :

மனிதர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை தீர்க்க வழி சொல்லும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா!

5ae4ca489af49d3caac982f296199706.jpg

ஆன்மீகம் மூலம் உலக அளவில் பல அதிசயங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மாவின் எளிமையான போதனைகளும், ஆன்மா பற்றிய அறிவுரைகளும், தியானங்களும் பிரபலமாகி வருகிறது.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்த சித்தர் லட்சுமி அம்மாவின் அருள்வாக்கு தியான பயிற்சி முகாமில் ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.

 

இதில், முதல் நிகழ்ச்சியாக மாற்றுத் திறனாளிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இரண்டாவதாக ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா அவரைக்காண வந்த பக்தர்களுக்கு ஆன்மாவைக் கொண்டு மனித வாழ்க்கையின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது குறித்து, பிரசங்கம் செய்தார்.

 

பிரசங்கத்தில் பேசிய ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா, ”ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆத்ம சக்தி இருக்கிறது. மனிதனுக்குள்ள தெய்வ சக்தியை வெளிக்கொணர செய்வது. இந்த ஆத்ம சக்தியில் விவேகானந்தரோ அல்லது பல சித்தர்களோ கூட இருக்கலாம். இந்த சக்தியை சரியாக பயன்படுத்தினால் மனிதர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை அவர்களாகவே சரி செய்துக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல், நாட்டிற்கு தேவையான நன்மைகளையும் செய்ய முடியும்.

 

மேலும், ஆன்மா என்பது உயிருள்ள மனிதருக்குள் இருப்பது, ஆத்மா என்பது இறந்தவர்களை குறிப்பது.” என்றார்.

 

மூன்றாவது நிகழ்ச்சியாக, தியானம் என்கிற தவமுறையில் ஆன்மாவை உணர்தல் குறித்து தியானம் ஒன்றைக் கற்றுக் கொடுத்தார்.

 

பின்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்களின் ஆன்மிக சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.

 

நிகழ்ச்சியின் இறுதியில், பக்தர்கள் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மாவிற்கு பொன்னாடை அணிவித்தனர். பக்தர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆத்மசித்தர் லட்சுமி அம்மா அருளாசி வழங்கினார்.

 

Aadma Sidhar Lakshmi Amma

 

ஸ்ரீ ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா பற்றி:

 

 

ஜெயலட்சுமி என்கிற இயற்பெயர் கொண்ட ஆத்ம சித்தர் லட்சுமி அம்மா, சிவகங்கை மாவட்டம், பரமக்குடி அருகில் ரெபிள் முத்துராமலிங்க சேதுபதி ராஜ பரம்பரையில் உதித்தவர்.

 

இளம் வயதில் ஆன்மீக ஈடுபாடு கொண்டு சித்தர்களுக்கும், சாமியார்களுக்கும் தொண்டு செய்து தன் ஆன்மீக பணியை தொடங்கினார்.

 

ஸ்ரீரகுநாத சுவாமி குருகுரு தேவர், கொல்லி மலை ஜடையம்மா, சாய்நாத் கண்டோபாவா, கோதண்டசாமி சாஸ்திரிகள், கு8ரு சீதாரம் பாபா ஆகிய ஐந்து குருமார்களிடம் தீட்சை வாங்கி ஆன்மீக நேரடி தெய்வ சக்தி பெற்றவர்.

 

காசி, ஹரிதுவார், ரிஷிகேஷ், கேதாரிநாத், பத்ரிநாத், கைலாயம், கங்கோத்ரி, இமயமலை, ஜம்மு காஷ்மீர், ஜெகநாத் பூரி, காமோத்தியா, உச்சென் மகாகால் போன்ற ஆன்மீக ஸ்தலங்களில் தியான நிலையில் இருந்து தவம் செய்தவர்.

 

இந்த பூலோக வாழ்க்கையில் கர்மா பூமியில் பல வகையான பிரச்சினைகளில் சிக்கி சுழலும் அனைவரையும் தன் பிள்ளைகளாக பாவித்து அவர்கள் சார்ந்து வரும் ஆன்மாக்களைக் கொண்டு அவர்களுக்கு நன்மை அளிக்கிறார்.

Recent Gallery