மாணவர்களுக்கு படிப்பை மட்டுமே போதிக்காமல், அவர்களிடம் இருக்கும் கூடுதல் திறமைகளை அறிந்து, அதை மெருகேற்றி, அவர்களை சாதனையாளர்களாக உருவாக்குவதில் வேலம்மாள் பள்ளி திறம்பட செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், சென்னை, முகப்பேர் அருகே உள்ள மேல் அயனம்பாக்கம் வேலம்மால் வித்யாலாயா இணைப்புப் பள்ளியில் 1ம் வகுப்பு படிக்கும் சிறுமி சாரா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மாணவி சாரா, கண்களைக் கட்டியபடி ஐந்து ரூபிக்ஸ் கியூப் புதிர்களைக் கவிஞர் வைரமுத்துவின் கவிதைகளை ஒப்புவித்தப்படியே 3 மணித்துளிகளுக்கும் குறைவான நேரத்தில் விடுவித்து, ’உலகின் இளம் சாதனையாளர்’ என்ற விருதினை வென்று சாதனை படைத்துள்ளார்.
சாராவின் இந்த சாதனை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகம், இந்திய சாதனைப் புத்தகம் மற்றும் தமிழ்நாடு சாதனைப் புத்தகங்களில் இடம்பெறும் முயற்சியினை வேலம்மால் வித்யாலாயா இணைப்புப் பள்ளி திறம்பட நிறைவேற்றியது.
இதற்கான நிகழ்ச்சி இன்று, மேல் அயனம்பாக்கம் வேலம்மால் வித்யாலாயா இணைப்புப் பள்ளியில் இன்று (நவ.22) நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், முன்னாள் செய்தி வாசிப்பாளரருமான்ன பாத்திமா பாபு கலந்துக் கொண்டார்.
மாணவி சாராவின் இம்முயற்சியை வெகுவாக பாராட்டி அவரை வாழ்த்திய பாத்திமா பாபு, சாராவின் சாதனைமுயற்சி அனைத்து மாணவர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும், என்று பாராட்டினார். மேலும், வாழ்க்கையில் பல தடைகளை கடந்த பிறகே சாதிக்க முடியும், அதனால் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் தொடர்ந்து முயற்சித்தால் வெற்றி நிச்சயம், என்பதை மாணவர்கள் மனதில் கொள்ள வேண்டும், என்றும் கூறினார்.